12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2018

12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,199-க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர் களுக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
இந்த இணைப் பில் அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளவில்லா டேட்டா

நாட்டின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.1,199-க்கு குடும்ப பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேருபவர்களுக்கு மாதந்தோறும் அளவில்லா டேட்டாக்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், 30 ஜி.பி. வரை 10 எம்பிபிஎஸ் வேகத்திலும், 30 ஜிபிக்கு மேல் 2 எம்பிபிஎஸ் வேகத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.அத்துடன், இந்த இணைப்பு டன் வழங்கப்படும் தரைவழி தொலைபேசி இணைப்புக்கு மாதாந்திர கட்டணம் கிடையாது. அதைத் தவிர, இந்த பிராட்பேண்ட் இணைப்பு பெறுபவர் களுக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் வழங்கப் படும்.லோக்கல் மற்றும் எஸ்டிடிஇந்த மொபைல் சிம் இணைப்புகளில் அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் (லோக்கல் மற்றும்எஸ்டிடி) அழைப்புகளை மேற்கொள்ளலாம். அளவில்லா டேட்டாக்களையும் பதிவிறக்கம் செய் யலாம்.

12-ம் வகுப்பு பாடம் இலவசம்

இதைத் தவிர, இந்த 3 சிம் இணைப்புகளி்ல் ஒரு சிம் இணைப்பில் ஆன்லைன் டிவியை இலவசமாக பார்க்கலாம். அத்துடன், 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு பாடத்தை ஆன்லைன் மூலம் ஒரு மாதம் வரை இலவசமாக கற்கலாம். இந்த பிராட்பேண்ட் இணைப்பை ரத்து செய்ய விரும்பினால், 3 மொபைல் ப்ரீபெய்டு சிம் இணைப்புகளும் ரத்துசெய்யப்படும்.பிராட்பேண்ட் இணைப்பு களுக்கான மாதாந்திர கட்டணத்தை ஒரு வருடம், 2 வருடம் அல்லது 3 வருடம் என சேர்த்தும் செலுத்தலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி