முதல்முறையாக பொதுத்தேர்வு: பிளஸ் 1 தேர்வுகள் கடினமாக இருப்பதாக ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து- - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2018

முதல்முறையாக பொதுத்தேர்வு: பிளஸ் 1 தேர்வுகள் கடினமாக இருப்பதாக ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து-

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வுகள் பொதுவாக கடினமாக இருப்பதாக ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து தெரிவித்தனர்.
11-ம் வகுப்புக்கு இந்த ஆண்டிலிருந்து மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் தேர்வில் முதல் தாள் எளிதாகவும் 2-ம் தாள் சற்று கடினமாகவும் இருந்தது. அதேபோல், ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்தது. தனியார் பள்ளி மாணவ - மாணவிகள் தேர்வு எளிதாகக் கருதினாலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் தேர்வை கடினமாகக் கருதினர்.இந்த நிலையில், ஆங்கிலம் 2-வது தாள் தேர்வு நேற்று நடந்தது. முதல் தாளுடன் ஒப்பிடும்போது 2-வது தாள் சற்று எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் கூறினர். தற்போது பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சிபொதுத்தேர்வை எழுதினாலும், வினாத்தாள் முறைமுற்றிலும் வேறுமாதிரியாக மாற்றப்பட்டுள்ளது.

புளு பிரிண்ட் முறை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புளு பிரிண்ட் முறையிலே பொதுத்தேர்வில் வினாக்கள் கேட்கப்படும். அதன்படி, குறிப்பிட்ட பாடப்பகுதியில் எத்தனை மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்பது மாணவர்களுக்கு முன்பே தெரியும். எனவே, அவர்கள் குறிப்பிட்ட பாடப்பகுதிகளைப்படிக்காமல் விட்டுவிட முடியும். ஆனால், பிளஸ் 1 பொதுத்தேர்வில் புளு பிரிண்ட் முறைகிடையாது.எந்தப் பகுதியில் இருந்தும் எத்தனை மதிப்பெண்ணுக்கு வேண்டுமானாலும் கேள்விகள்கேட்கப்படலாம். எனவே, பிடிக்காத பாடப்பிரிவுகள் என்று மாணவர்கள் எதையும் படிக்காமல் விட்டுவிட முடியாது.

தமிழ், ஆங்கிலம் இரு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ் 1 தேர்வு பொதுவாக சற்று கடினமாக இருப்பதாகவே மாணவர்களும் ஆசிரியர்களும் கருதுகின்றனர். முதல்முறையாக பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் விடைத்தாள் மதிப்பீட்டில்சற்று தாராளம் காட்டப்படுமா என்று பிளஸ் 1 மாணவ - மாணவிகள் எதிர்பார்க்கிறார்கள்.

14 comments:

  1. TNTET CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை பயணம்...


    https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

    ReplyDelete
    Replies
    1. 2017 TNTET CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை பயணம்...


      https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

      Delete
    2. NO USE study well upcoming TET EXAM....2018

      Delete
    3. உனக்கு என்ன பைதிம்மா

      Delete
  2. RajalRajalingam Nee nallavana?????????????????????????????

    ReplyDelete
  3. ராஜாலிங்கத்தை நமம்மி போனால் அவனுடன் சேர்ந்து நாங்களும் சிறைக்கு செல்லவேண்டும் போல??? நான் வரவில்லை மற்றவர்கள் யோசித்து பாருங்கள் நண்பர்களே

    ReplyDelete
  4. kadaisi varaikkum 11th nadathamale op adikkalanu nenachavanukku than kashtamave irukkum

    ReplyDelete
  5. Tet 2018 ku appuram trb pogalam

    ReplyDelete
  6. Adichanparrra appointment order....

    ReplyDelete
  7. 2018 kum serthu ottuka job nu sollaporanga apa seraipingala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி