பிளஸ் 1 வினாத்தாள் ஆய்வுக்கு கமிட்டி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2018

பிளஸ் 1 வினாத்தாள் ஆய்வுக்கு கமிட்டி?

பிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி துறையில் நிபுணர் கமிட்டி அமைக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளவும், அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தவும், பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பிளஸ் 1 பொது தேர்வில், மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.கல்வியாளர்களும், மிகவும் தரமான வினாத்தாள்கள் என, பாராட்டியுள்ளனர்.ஆனால், மனப்பாட பயிற்சி மேற்கொண்ட மாணவர்கள், சிந்தித்து பதில் அளிக்க, சிரமப்படும் நிலைஏற்பட்டுள்ளது.

இதனால், போனஸ்; கருணை மதிப்பெண் வேண்டும் என, பெற்றோர், மாணவர்கள் கோரியுள்ளனர்.இந்நிலையில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனைப்படி, பிளஸ் 1 வினாத்தாளின் கடினத்தன்மை குறித்து ஆராய, நிபுணர் கமிட்டி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கமிட்டியில், பேராசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் இடம் பெறுவர் என, தெரிகிறது.

பொது தேர்வுகள் முடிந்த பின், பிளஸ் 1 விடைத்தாள்கள், மே மாதம் திருத்தப்படும். அப்போது, மாணவர்கள் பெறும் அதிக பட்ச மதிப்பெண்ணை பொறுத்து, நிபுணர் கமிட்டி முடிவுகளை மேற்கொள்ளும்.

அதற்கு முன், எத்தனை கேள்விகள், மாணவர்களின் நுண்ணறிவை துாண்டின; எந்த கேள்வி களுக்கு பதில் எழுத, மாணவர்கள் திணறினர் என்பது உட்பட, பல்வேறு வகையில், ஆய்வு செய்யப்படும்.பின், மாணவர்களில் பெரும்பாலானோர், சரியாக பதில் எழுதாத கேள்விகள் அடையாளம் காணப்பட்டு, அந்த கேள்விகளுக்கு, கருணை; போனஸ் அல்லது சமநிலை மதிப்பெண் வழங்க, முடிவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி