தமிழ் 2ம் தாள் : 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2018

தமிழ் 2ம் தாள் : 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்ததால், முதல் தாளின் மதிப்பெண் இழப்பை ஈடு செய்யலாம் என, மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு துவங்கியது.இந்த ஆண்டு பொது தேர்வுகளில், வினாத்தாள்முறை மாறியிருப்பதால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வுக்கு சென்றனர். அதேபோல், முதல் தாள் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது. இதுவரை மொழிப்பாடங்ளின் வினாத்தாள்களை பார்த்து, பெரும்பாலும், மாணவர்கள் அச்சப்படுவதில்லை. ஆனால், இந்த முறை, தமிழ் தேர்விலேயே, மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த அதிர்ச்சியுடன், நேற்று இரண்டாம் தாள் தேர்வுக்கு, மாணவர்கள் சென்றனர்.

ஆனால், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், வினாத்தாள் எளிமையாக இருந்தது. அதுவும் மாணவர்கள் பெரிதும் நம்பும், சரியான விடையை தேர்வு செய்யும், ஒரு மதிப்பெண் வினாக்கள், முழுமையாக எளிமையாக இருந்தன. வினாத்தாள் குறித்து, சிவகங்கை, கே.ஆர்.மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர், நீ.இளங்கோ கூறியதாவது: முதல் தாளில், மாணவர்கள் தவறவிட்ட மதிப்பெண்களை மீட்டு எடுக்கும் வகையில், இரண்டாம் தாள் எளிதாக இருந்தது.

இதில், நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி, கிராமப்புற மாணவர்களும், தடுமாற்றமின்றி எழுதியுள்ளனர். ஒரு மதிப்பெண் பகுதி, கவிதை, பா நயம், கட்டுரை எழுதுதல் என அனைத்து பகுதிகளும், மாணவர்கள் பயிற்சி பெற்றவையாக இருந்தன. தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு குறித்த கேள்வி மட்டும், கொஞ்சம் யோசிக்க வைப் பதாக இருந்தது.இவ்வாறுஅவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி