ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு செல்லும்: ஐகோர்ட்டில் மத்தியஸ்தர் அறிக்கை தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2018

ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு செல்லும்: ஐகோர்ட்டில் மத்தியஸ்தர் அறிக்கை தாக்கல்

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில் போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தொழிலாளர்களின் 2.57 காரணி ஊதிய உயர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மத்தியஸ்தர் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து இந்த வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக போக்குவரத்து ஊழியர்கள் தரப்பில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கேட்ட நிலையில், 2.44 மட்டுமே தர முடியும் என அரசு உறுதியாக அறிவித்தது. இதைக் கண்டித்து, போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஜனவரி 4 முதல் 11 வரை 8 நாள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்டு பேசி சுமுக முடிவெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு செல்லும் என்று மத்தியஸ்தர் பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி