அரசு உதவிபெறும் பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாகும் அபாயம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2018

அரசு உதவிபெறும் பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாகும் அபாயம்!

21 comments:

  1. அரசு உதவிபெறும் பள்ளியில் பணம் கட்டி சேர்ந்த ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளிகளில் இடமாறுதலா..
    #வன்மையாக_கண்டிக்கிறேன்

    அரசு உதவிபெறும் பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரில் #10இலட்சம் கொடுத்து ஆசிரியர் வேலைக்கு போகத் தெரிந்த ஆசிரியரே, அப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை கண்டு கொள்ளாதது ஏன்....

    இப்போ மாணவர் எண்ணிக்கை குறைந்ததும் அரசு பள்ளிக்கு இடமாறுதல் செய்ய கோரிக்கை வைக்கிறீர்கள் கொஞ்சம் கூட கேட்க #கூட்சமில்லையா..

    தமிழக அரசே புதிய காலிப்பணியிடங்களை உருவாக்கி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வழங்கிடு...

    இது குறித்து #உயர்_நீதிமன்றத்தில் #வழக்கு தொடுப்பேன் விரைவில்..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பள்ளியில் பணியாற்றும் அனைவரும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தி விட்டார்களா? இன்று அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் உள்ள நிலையில் எப்படி உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை மட்டும் குறை கூற முடியும். இங்கு யாரும் வேண்டுமென்று பணம் கொடுத்து வேலை வாங்கவில்லை , தகுதித் தேர்வு என்பது 2013 முதல் நடைமுறைக்கு வந்தது , அதற்கு முன் அரசுப் பள்ளி வேலைக்கு ஜாதி அடிப்படையிலும், மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையிலும் , மாநில சீனியாரிட்டி அடிப்படையிலும் தான் வாய்ப்பு வழங்கப்பட்டது அப்படியிருக்கையில் உதவி பெறும் பள்ளியில் பணம் கொடுத்து தான் வேலை வாங்க முடியும்.
      அடுத்ததாக உதவி பெறும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு பாரபட்சமான நடைமுறையே காரணம்
      அதாவது அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்விக்கு அனுமதி உண்டு ஆனால் உதவி பெறும் பள்ளிக்கு அனுமதி கிடையாது என்றால் ஆங்கில மோகத்தால் மக்கள் அனைவரும் எப்படி உதவி பெறும் பள்ளியை நாடுவர்.
      அடுத்ததாக உள் கட்டமைப்பு வசதியில் உதவி பெறும் பள்ளிகளுக்கு எவ்வித உதவியும் இல்லை அரசுப் பள்ளியில் Smart Class க்கு தேவையான உபகரணங்கள் அரசால் வழங்கப்படுகின்றது. ஆனால் விலை அதிகமுள்ள அத்தகைய உபகரணங்களை ஒரு சில பெரிய நிர்வாகங்களைத் தவிர மற்ற சிறிய உதவிபெறும் பள்ளி நிர்வாகத்தால் வாங்க இயலாது என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்
      அடுத்ததாக உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிர்வாகம் கொடுக்கும் மன உளைச்சல் சொல்லி மாளாது, இவை எல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும் .
      அடுத்ததாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் முதல் அனைத்து அதிகாரிகளும் உதவி பெறும் பள்ளி என்றாலே இளப்பமாக நினைக்கின்ற இந்நாளில் எப்படி அவர்களால் சிறப்பாக பணி புரிய முடியும்
      அரசுப் பள்ளி ஆசிரியர்களே தயவு செய்து ,அவர்களும் நம்மைப் போன்ற ஆசிரியர் பணியைச் செய்பவர் என்று மட்டும் பாருங்கள் , அவர்கள் பணம் கொடுத்து சேர்ந்தவர்கள் மகா பாவிகள் என்றெல்லாம் சித்தரிக்க வேண்டாம் . எத்தனை பேர் ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு பணம் கொடுத்து சீட்டு வாங்கி படித்து விட்டு இன்று அரசுப் பள்ளியில் வேலை செய்கிறார்கள், அப்போ அவர்கள் எல்லாம் ஆசிரியர் வேலைக்கு லாயக்கற்றவர்களா?
      உயர் நீதிமன்றத்தில் வழக்கு அவர்களுக்கும் தொடுக்கத் தெரியும் என்பதை மறந்து விட்டீரோ?

      Delete
    3. அப்படினா பணம் கொடுத்து வேலை வாங்குவது சரி என்று சொல்வது போல் தெரியுது

      Delete
    4. அப்படினா பணம் கொடுத்து வேலை வாங்குவது சரி என்று சொல்வது போல் தெரியுது

      Delete
    5. பணம் கொடுத்து வேலை வாங்குவது தவறு என்றால், பணம் கொடுத்து சீட்டு வாங்கி ,படித்து அரசுப் பள்ளியில் வேலை செய்வதும் தவறு தானே. இன்று அரசு வேலைக்கே பணம் கொடுக்கிறார்கள் (உ.ம். பாலிடெக்னிக் விரிவுரையாளர்) எனும் போது ஒரு தனியார் நிர்வாகத்திற்கு பணம் கொடுப்பதில் தவறில்லை

      Delete
    6. பெரிய நிர்வாகங்கள் சிலவற்றை தவிர யாரும் பணம் பெறுவதில்லை.

      Delete
    7. புதிய பணியிடங்கள் உருவாக்கி ஆசிரியர் பணி வழங்கு என கோரிக்கை வைக்கும் வருங்கால ஆசிரியர்களே சற்று யோசித்து பார்
      1) அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு.
      2) புற்றுஈசல் போல் தெருவுக்கு ஒரு தனியார் பள்ளி
      3) தற்போது பெற்றோர்கள் தனியார் பள்ளியை கௌரவமாகவும் அரசு பள்ளியை ஏளனமாகவும் பார்க்கின்றனர்.
      4) ஆங்கில மோகம் சமூகத்தில் அதிகமாக உள்ளது.
      5) அரசு பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது இல்லை.

      தீர்வு

      ஒரு புதிய சட்டம் வேண்டும்

      அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ,அரசின் நிதியில் சம்பளம் பெறும் அனைவரும் ....தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும்.

      அப்போது அரசு பள்ளிகள் தரம் அதிகமாக உயர்த்தப்படும்... மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும்.. புதிய பணியிடம் உருவாகும்...

      இது போன்ற மாறுதல் நடைபெறாத வரை ஆசிரியர் பணியிடம் குறைந்து கொண்டே செல்லும்...

      Delete
  2. Eppo 50000 teachers nirappapadumnu sonnanga

    ReplyDelete
  3. Eppo 50000 teachers nirappapadumnu sonnanga

    ReplyDelete
  4. தனியார் உதவிபெறும் பள்ளிகளில் லஞ்சம் கொடுத்து உபரியாக பணியில் சேர்தவர்களை தேவைப்படும் வேறு உதவிபெறும் பள்ளிகளில் பணிமாற்றம் செய்ய வேண்டுமே தவிர அவர்களை அரசுப்பள்ளிகளில் நியமிக்கக்கூடாது.அரசு பள்ளிகளில் TRB மூலமாகவே நிரப்பவேண்டும். குறுக்கு வழியில் முரகேடாக சேர்ந்த 25000 உபரி தனியார் பள்ளி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமித்தால் பல ஆண்டுகளாக வேலை கிடைக்கும் என்று காத்திருக்கும் லட்சக்கணக்கான வேலையில்லாத ஆசிரியர் கனவு இனிமேல் கனவாகவே முடியும்.எனவே வேலையில்லாத இளைஞர்கள் போராட்டம் செய்தால்தான் இந்த மாதிரி நடக்காதது.கேட்பார் இல்லை என்றால் அரசியல் வாதிகள் மற்றும் ஊழல் உயர் அதிகாரிகள் எதுவானாலும் செய்வார்கள்.அதற்கு அவர்கள் முதலில் sample test க்காக கையில் எடுத்தது அண்ணாமலை பல்கலைக்கழகம்.ஏனெனில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் UGC அனுமதி அளித்தது சுமார் 750 பேராசிரியர் உட்பட 4000 பணியிடங்கள் மட்டுமே. ஆனால் 2003 ஆம் ஆண்டுக்கும் பின்னர் சுமார் 7000 பேராசிரியர் உட்பட 17000 பணியில் சேர்ந்துள்ளனர்.இதற்கு சாட்சியாக தற்போது நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுனர் முன்னிலையில் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் பேசியது அண்ணாமலை பல்கலைக்கழகம் நிதிநெருக்கடியில் உள்ளது இப் பல்கலையில் 6000 ஊழியர்களே பணியாற்ற வேண்டும் ஆனால் 12000 த்துக்கும்மேற்பட்டவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர் எனவேதான் கூடுதலாக உள்ள பேராசிரியர் மற்றும் பணியாளர்களை அரசுக்கல்லூரிகளிலும் மற்றும் மற்ற அரசு அலுவலகங்களிலும் நியமிக்கப் படுவார்கள் என்று பேசினார்.இதில் என்ன கொடுமை என்றால் சுமார் 700 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தங்கள் மனைவிக்கு பேராசிரியர் பணிவாங்கிதந்துள்ளார்கள்.இது எப்படி சாத்தியம்?மேலும் பலர் குடும்ப சகிதமாக பணியில் சேர்ந்துள்ளனர்.இவர்களை எல்லாம்அஅரசுக்கல்லூரி களில் நியமிக்கப் பட்டதை யாரும் கேள்வி கேட்காமடையர்களாக உள்ளனர்.எனவே தான் தான் தற்போது தேவைக்கு அதிகமாக நியமிக்கப்பட்ட சுமார் 500 கம்ப்யூட்டர் புரகிராமர்களில் சுமார் 100 பேரிடம் தலாக் 8 லட்சம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவி பேராசிரியராக பதவி உயர்வு வழங்கி அவர்களையும் அரசுக்கல்லூரி களில் நியமித்துள்ளார்கள்.ஒரு பல்கலையில் உபரியாக பேராசிரியர்கள் இருக்கும் போது எப்படி பதவி உயர்வு கொடுத்து அரசுக்கல்லூரிகளில் நியமிக்கமுடியும்?.இதனால் படித்துதுவிட்டு பேராசிரியர் வேலைக்கு காத்திருக்கும் ஏழைகள் என்னாவது. இந்த கொடுமைகளை யாரும் எந்தவித அரசியல் கட்சியும் கேட்காத காரணத்தால் தான் தற்போது இதே formula வைத்து உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களையும் அரசு பள்ளிகளில் முறைகேடாக மற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகா என்ன கொடுமை தமிழகத்தில் இனிமேல் குறுக்கு வழியில் நுழைந்து அப்படியே நேரடியாக அரசு பள்ளிகளில் முறைகேடாக சேர்ந்து விடலாம்.என்ன புத்திசாலிதனம் இந்த அரசு நிர்வாகம்.

    ReplyDelete
    Replies
    1. தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பள்ளியில் பணியாற்றும் அனைவரும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தி விட்டார்களா? இன்று அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் உள்ள நிலையில் எப்படி உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை மட்டும் குறை கூற முடியும். இங்கு யாரும் வேண்டுமென்று பணம் கொடுத்து வேலை வாங்கவில்லை , தகுதித் தேர்வு என்பது 2013 முதல் நடைமுறைக்கு வந்தது , அதற்கு முன் அரசுப் பள்ளி வேலைக்கு ஜாதி அடிப்படையிலும், மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையிலும் , மாநில சீனியாரிட்டி அடிப்படையிலும் தான் வாய்ப்பு வழங்கப்பட்டது அப்படியிருக்கையில் உதவி பெறும் பள்ளியில் பணம் கொடுத்து தான் வேலை வாங்க முடியும்.
      அடுத்ததாக உதவி பெறும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு பாரபட்சமான நடைமுறையே காரணம்
      அதாவது அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்விக்கு அனுமதி உண்டு ஆனால் உதவி பெறும் பள்ளிக்கு அனுமதி கிடையாது என்றால் ஆங்கில மோகத்தால் மக்கள் அனைவரும் எப்படி உதவி பெறும் பள்ளியை நாடுவர்.
      அடுத்ததாக உள் கட்டமைப்பு வசதியில் உதவி பெறும் பள்ளிகளுக்கு எவ்வித உதவியும் இல்லை அரசுப் பள்ளியில் Smart Class க்கு தேவையான உபகரணங்கள் அரசால் வழங்கப்படுகின்றது. ஆனால் விலை அதிகமுள்ள அத்தகைய உபகரணங்களை ஒரு சில பெரிய நிர்வாகங்களைத் தவிர மற்ற சிறிய உதவிபெறும் பள்ளி நிர்வாகத்தால் வாங்க இயலாது என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்
      அடுத்ததாக உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிர்வாகம் கொடுக்கும் மன உளைச்சல் சொல்லி மாளாது, இவை எல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும் .
      அடுத்ததாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் முதல் அனைத்து அதிகாரிகளும் உதவி பெறும் பள்ளி என்றாலே இளப்பமாக நினைக்கின்ற இந்நாளில் எப்படி அவர்களால் சிறப்பாக பணி புரிய முடியும்
      அரசுப் பள்ளி ஆசிரியர்களே தயவு செய்து ,அவர்களும் நம்மைப் போன்ற ஆசிரியர் பணியைச் செய்பவர் என்று மட்டும் பாருங்கள் , அவர்கள் பணம் கொடுத்து சேர்ந்தவர்கள் மகா பாவிகள் என்றெல்லாம் சித்தரிக்க வேண்டாம் . எத்தனை பேர் ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு பணம் கொடுத்து சீட்டு வாங்கி படித்து விட்டு இன்று அரசுப் பள்ளியில் வேலை செய்கிறார்கள், அப்போ அவர்கள் எல்லாம் ஆசிரியர் வேலைக்கு லாயக்கற்றவர்களா?
      உயர் நீதிமன்றத்தில் வழக்கு அவர்களுக்கும் தொடுக்கத் தெரியும் என்பதை மறந்து விட்டீரோ?

      Delete
  5. ஓமெணோடமமப

    ReplyDelete
  6. Rajalingam sir paper 1 vacancy irukka

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி