தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2018

தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன. உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும்.
சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் 2,018 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் உபரியாக கண்டறியப்பட்ட 2,533 பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

9 comments:

  1. நண்பர்களே செய்தி நல்லாத்தான் இருக்க ஆனால் போஸ்டிங் போடமாடிருகிரார்களே

    ReplyDelete
  2. *💢⚡FLASH NEWS⚡💢*

    *🔯✍🏻 TNSET 2018 EXAM: தரமற்ற வகையில் அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு; விடைக்குறிப்பிலும் பல்வேறு தவறுகள்; தேர்வை முடிவை ரத்து செய்யக்கோரியும் மறுதேர்வு நடத்த கோரியும் UGC க்கு பேராசிரியர்கள் புகார் கடிதம்📝*

    *⚠ TN SET 2018 Not Having any quality for choose a eligible candidates. So Stop The Result and cancel The Exam -Asst.Professors Compliant Letters To UGC👇🏻*

    🌍 https://kaninikkalvi.blogspot.in/2018/03/tnset-2018-exam-ugc.html?m=1

    More News visit

    Kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. TN SET 2018 SCORES ANALYSIS (Responses)
      https://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit

      Delete
  3. *💢⚡FLASH NEWS⚡💢*

    *🔯✍🏻 TNSET 2018 EXAM: தரமற்ற வகையில் அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு; விடைக்குறிப்பிலும் பல்வேறு தவறுகள்; தேர்வை முடிவை ரத்து செய்யக்கோரியும் மறுதேர்வு நடத்த கோரியும் UGC க்கு பேராசிரியர்கள் புகார் கடிதம்📝*

    *⚠ TN SET 2018 Not Having any quality for choose a eligible candidates. So Stop The Result and cancel The Exam -Asst.Professors Compliant Letters To UGC👇🏻*

    🌍 https://kaninikkalvi.blogspot.in/2018/03/tnset-2018-exam-ugc.html?m=1

    More News visit

    Kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. செட் 2018 தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கு பதிவு செய்வதன் மூலம்
    தோராயமான cut-off மதிப்பெண்களை கண்டறியலாம்.
    பதிவு செய்ய
    https://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit

    விடை குறிப்புகளை அறிந்து கொள்ள
    http://www.motherteresawomenuniv.ac.in/TNSET%202018%20Ans%20Keys/All%20Papers.html

    ReplyDelete
  6. Posting yappo sir pooduvika? After 2018TET?

    ReplyDelete
  7. Ipadiye solitu irunka election varum next 5 years ipadiye sollunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி