அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2018

அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு

அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
வேலூர் மாவட்டம் மாதனூரி்ல் உள்ள அரசு உதவி பெறும் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், இரவுக் காவலாளி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த இடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு மனு அனுப்பப்பட்டது .

இந்த மனுவை அரசு பரிசீலிக்காததால் 4 பேர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வந்தபோது அரசு ஒப்புதல் அளிக்காததால் இவர்கள் 4 பேரும் ஊதியம் பெறாமல் இருப்பதாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத காலியிடங்களை நிரப்பக் கல்வி நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி 2 வாரத்திற்குள் ஒப்புதல் வழங்கத் தமிழக அரசுக்குக் கெடு விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி