31ல் வங்கிகள் உண்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2018

31ல் வங்கிகள் உண்டு

'வங்கிகளுக்கு, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல் இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளுக்கு, வாரந்தோறும், இரண்டாவது, நான்காவது சனிக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி, நிதியாண்டு நிறைவு உட்பட காரணங்களால், வரும், 29 முதல், ஏப்., 2 வரை, ஐந்து நாட்களுக்கு, வங்கி களுக்கு தொடர் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.வரும், 29, 30ம் தேதி விடுமுறை; 31ல், வங்கி கணக்கு முடிப்பு என்றாலும் கூட, அன்று வழக்கம் போல், வங்கி செயல்படும் என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி -கனரா, மேலாளர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் தவறானது. கடந்த காலங்களில், கணக்கு முடிப்பு என்பது, வங்கி கிளை வாரியாக நடந்தது. தற்போது, அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதால், வங்கி தலைமை, மண்டலங்கள் இடையே, கணக்கு முடிப்பு பணி நடக்கிறது; இதற்கு விடுமுறை அளிக்கும் நடைமுறை மாறிவிட்டது.

ஏப்., 2ல், கணக்கு முடிப்பு விடுமுறை அளிக்க, வங்கியாளர் சங்கங்கள், ரிசர்வ் வங்கியிடம் மனு அளித்துள்ளன; இதுவரை, ரிசர்வ் வங்கி, விடுமுறை அறிவிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி