3 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2018

3 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. அன்று காலை தமிழக அரசின் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி, பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் 22-ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.அதன்பிறகு அன்று மாலை 3.30 மணிக்கு நடந்த சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண் மை வாரியம் அமைக்க வேண் டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு பேரவை இன்று மீண்டும்கூடுகிறது. காலை 10 மணிக்கு பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவை தலைவர் வாசிப்பார். அதைத் தொடர்ந்துதேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதன்பிறகு கேள்வி நேரம் முடிந்ததும் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும்.

மார்ச் 22-ம் தேதி வரை 4 நாட் களுக்கு விவாதம் தொடரும். 22-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றுகிறார். அன்றைய தினம் 2018-19 நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளை ஓபிஎஸ் தாக்கல் செய்வார்.அதனைத் தொடர்ந்து 2017-18-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை மீதான வாக்கெடுப்பு நடக்கும். 4 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் எனகூறப்படுகிறது.மக்களவைத் தேர்தலுக்கு இன் னும் ஓராண்டே இருக்கும் நிலை யில் தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள தெலுங்கு தேசம் கட்சி, மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளது.உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதப்படுத்தி வரும் மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.ஆனாலும், அதிமுக தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இன்று தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்சினையை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் ஆகிய கட்சிகள் திட்ட மிட்டுள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள டிடிவி தினகரன், கடந்த ஜனவரியில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேச அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.இந்தக் கூட்டத் தொடரில் அவரும் பல முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் பலர் அவருக்கு ஆதரவாக செயல்படக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இதுதவிர நீட் தேர்வு, குடிநீர் தட்டுப்பாடு,உள்ளாட்சித் தேர் தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் பேரவையில் எழுப்ப திமுக, காங்கிரஸ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பட்ஜெட் கூட்டத் தொடர் நடப்பதை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அப்போது சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைமட்டுமல்லாது தினகரனையும் எதிர்கொள்வது குறித்து முதல்வர் கே.பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக அவரது மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கூறியிருப்பதால் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதையும் பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி