போட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி: கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2018

போட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி: கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்'

'நீட் உள்ளிட்ட, மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள்வாங்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்துறைஅமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு, சம்பத் நகரில் உள்ள டிஜிட்டல் நுாலகத்தில், மாவட்டநுாலக ஆணைக்குழு சார்பில், யு.பி.எஸ்.சி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,போன்ற போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை திறந்துவைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:நீட் தேர்வுக்கான412 மையங்களில், 312 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.70ஆயிரத்து, 439 மாணவர்கள், இங்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம்,72 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம்.கூடுதலாக மாணவர்கள் வந்தாலும், தேவையான நடவடிக்கைஎடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள, 32 மாவட்ட தலைமை நுாலகத்திலும், நீட்,யூ.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., போன்ற மத்திய, மாநில அரசுகளின்போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து பயிற்சியும், இலவசமாகவழங்கப்படுகிறது. இங்கும், ஏழை மாணவர்கள், பதிவு செய்து, நீட்தேர்வு பயிற்சியை பெறலாம். நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுக்கானபுத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க, 400 கோடி ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையானால் கூடுதல் நிதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு - நீலகிரி இடையே விரைவில் 4 வழிச்சாலை : ''ஈரோட்டில்இருந்து நீலகிரிக்கு விரைவில், நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்.இதன் மூலம், விபத்துகள் குறையும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்.ஈரோட்டில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தேவையான இடங்களில்,நான்கு வழிச்சாலையும், இரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது.ஈரோட்டில் இருந்து, நீலகிரி வரை, விரைவில் நான்கு வழிச்சாலைஅமைய உள்ளது. இதற்கான திட்ட வரைவு தயாரித்து, நிதிஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பாதுகாப்பான பயணத்துடன்,விபத்துகள் குறையும்.இப்பகுதி மக்களின் நீண்ட கால கனவான,அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.இதற்காக, 1, 289 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 400 கோடியா???
    ப்பா....
    என்ஜாய் தல...

    ReplyDelete
    Replies
    1. oooooooooooooo oooooooooooooooooo ooooooooooooooooooooooooooooooooooooooooooooooh

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி