412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2018

412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழகத்தில் தற்போது 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 70 ஆயிரத்து 419 மாணவர்கள் நீர் தேர்வு பயிற்சி பெறுகின்றனர். அரசு பொதுத் தேர்வு முடிந்ததும், 8 கல்லூரிகளில் நீர் தேர்வுக்கான முழு பயிற்சி அளிக்கப்படும்.

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம் பெறும். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். விடைத்தாள் திருத்த கூடுதல் கட்டணம் கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் என்பது கவனத்திற்கு வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

1 comment:

  1. 2017 ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சிப்பெற்றோர் கவனத்திற்கு...

    தாள் -2 தேர்வு தேர்வு முடிந்து ஒருவருடமாக போகிறது இந்நாள் வரை காலிப்பணியிட நோட்டிபிகேசன் வரவில்லை, தேர்ச்சி சான்றிதழ் வழங்கவில்லை, பணிநியமனம் நடைபெறவில்லை.
    குறைந்தபட்சம் தரவரிசைப் பட்டியல் கூட வெளியிடவில்லை...

    தாள் -1க்கு பரிதாபமான நிலை...

    நாம் எத்தனையோ மனுக்கள் கொடுத்தும் இதுவரை பதில் இல்லை ஆகவே வரும் மார்ச் 23, வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு சென்னை டிஆர்பி அலுவலகம் செல்வோம் தோழர்களே...

    உணர்வுள்ளவர்கள், உணர்வுள்ளவர்கள் வாரீர்...

    வாட்சப் குழு

    TNTET - 2017 CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...


    https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி