ரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2018

ரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி

ரயில் நிலைய கவுன்டரில், டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, 5 சதவீதம் கட்டண சலுகை, ஏப்., 2 முதல்அமல்படுத்தப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில், 'டிஜிட்டல்' முறையில்,
யு.பி.ஐ., வசதியில் பணப் பரிமாற்றம் செய்து, டிக்கெட் முன்பதிவுசெய்பவர்களுக்கு, அடிப்படை கட்டணத்தில் இருந்து, 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த, ரயில்வே முடிவு செய்துள்ளது.இந்த திட்டம், ஏப்., 2 முதல், மூன்று மாதத்துக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு மைங்களில் மட்டுமே இத்திட்டம் செல்லுபடியாகும்.

இத்திட்டத்தில் சலுகை பெற வேண்டுமானால், டிக்கெட் கட்டணம், 100 ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும். மேலும், அதிகபட்சமாக, 50 ரூபாய் வரை மட்டுமே சலுகை பெற முடியும். மாதாந்திர சீசன் டிக்கெட் எடுப்பவர்களுக்கும், இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கும், இத்திட்டம் பொருந்தாதென, ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி