சென்னை பல்கலை. தேர்வில் ஆள்மாறாட்டம் : 800 மாணவர்கள் தேர்வெழுத தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2018

சென்னை பல்கலை. தேர்வில் ஆள்மாறாட்டம் : 800 மாணவர்கள் தேர்வெழுத தடை

சென்னை பல்கலைகழகம் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 800 மாணவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்துள்ளனர்.
முறைகேடு செய்த மாணவர்கள் அனைவரும் மைசூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இயங்கிவந்த தொலைநிலை கல்வி மையங்கள் மூலம் பயின்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்ததை மாணவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து 800 பேரும் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 பேர் தேர்வெழுதியதில் 200 பேர் மட்டுமே உண்மையாக தேர்வெழுதியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்களது தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட சென்னை பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான வெளியிடப்பட உள்ளது.

 தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். தேர்வுத் தாள் மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி