ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் மாணவர்கள் எதிர்பார்ப்பு! தேவையான புத்தகங்கள் வாங்க வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2018

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் மாணவர்கள் எதிர்பார்ப்பு! தேவையான புத்தகங்கள் வாங்க வலியுறுத்தல்

மதுரையில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் அரசு பள்ளி நுாலகங்களுக்கு மாணவர், ஆசிரியர் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் புத்தகங்கள் வாங்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளி நுாலகங்களுக்கு இந்தாண்டு புத்தகங்கள் வாங்க தலா 7500 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.'ஒவ்வொரு ஆண்டும் ஒரே கம்பெனியில் பெயரளவில் புத்தகம் வாங்கி அதை மூடை கட்டி வைத்து விட்டு, நிதியை செலவிட்டதாக கணக்கு காட்டப்படுகிறது,' என சர்ச்சை எழுந்துள்ளது.இதே திட்டத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆய்வக உபகரணம் வாங்குவதிலும் இதுபோல் சர்ச்சை எழுந்தது. இதற்கு பள்ளிகளில் குழு அமைத்து சுதந்திரமாக உபகரணம் கொள்முதல் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதேபோல் நுாலகத்திற்கு தேவையான புத்தகங்கள் எவை, மாணவர் போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு தேவையான புத்தகங்கள் என்ன என மாணவர், ஆசிரியரிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வாங்கவேண்டும். 'கமிஷன்' அடிக்க ஒரே கம்பெனியில் மொத்த புத்தகங்களையும் வாங்கும் சிலர் முயற்சிக்கு கல்வி அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி