ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2018

ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஆதார் வழக்கின் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்-ஐ இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆதார் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமூக நல உதவிகளை பெறுவதற்கும் மானிய உதவி பெறுவதற்கும் மட்டுமே மத்திய அரசு ஆதார் எண்-ஐ கேட்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக ஆதார் இணைக்க மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

2 comments:

  1. ஆதாரை சமூக நலத்திட்டகளைப் பெறுவதற்கு கட்டாயம் என மத்திய அரசு கூறுவதை சரி என ஏற்கும் உச்சநீதிமன்றமே
    அரசியல்வாதிகள் தொடங்கி
    சினிமாத்துறைச் சார்ந்தவர்கள்;
    பெரும் முதலலாளிகள்;
    அரசுத்துறை ஊழியர்கள்(முதல் குடிமகன் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை);
    அனைவரும் தங்கள் ஆதாருடன் வருமானத்தையும் சொத்து விவரங்களையும் வருடாவருடம் புதுப்பித்தல் அவசியம் என்பதையும் சேர்த்தே கூறினால் நன்றாக இருக்கும்.
    ஏனெனில்
    சமூக நலத்திட்டங்களைப் பெருவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது
    மேற்கூரியவர்களின் எண்ணிக்கை குறைவு எனவே எளிதாக விவரங்கபெற்று கணக்கு வைத்தாலே போதும்
    நீங்கள் கொண்டு வந்த ஆதாரின் பயனை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கலாமே.......

    ReplyDelete
  2. அருமையான கருத்து

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி