மீள முடியாத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் : உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2018

மீள முடியாத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் : உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கருணைக் கொலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் மீள முடியாத நோயால் தீராத வேதனையில் வாடுபவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம் என கூறியுள்ளது.
மேலும் செயலற்ற நிலையில் இருப்பவர்களையும் கருணைக் கொலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு, எனவேஇந்த உரிமையை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கருணைக் கொலை செய்வதற்கான வழிமுறைகளையும் வகுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்பிழைக்க வழியில்லாத நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அகற்றி  உயிரிழக்க வைக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி