'பாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2018

'பாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்'

மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை ஏற்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்யும் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வாஹா அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:திறன் மேம்பாடுதற்போதைய கல்வி முறையானது, மாணவர்களை, தகவல்களை சேகரிப்பவர்களாகவே மாற்றுகிறது. வாழ்க்கைக்கு உகந்த வகையில், அதில் மாற்றம் செய்து, உடற்பயிற்சி கல்வி, திறன் மேம்பாடு, ஒழுக்க நெறி பாடங்கள் போன்றவை சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்விச் சுமையை, 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.முடிவுகல்வி என்பது பொது அதிகாரப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாநிலங்களில்உள்ளதால், புதிய பாடத்திட்டங்களை ஏற்பது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யட்டும்.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

கே.வி.,க்களுக்கு தரவரிசையா?லோக்சபாவில் மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஇணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, 'பல்கலைகள், கல்லுாரிகளைப் போல, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தரத்தின் அடிப்படையில் பட்டியலிடும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.

2 comments:

  1. பாடதிட்டத்தை குறைக்காமல் தமிழ் இண்டு தாள்களை ஒரு தாளாகவும் ஆங்கிலம் இரண்டு தாள்களை ஒரு தாளாகவும் மாற்றினால் 9, 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு சுமை குறையும்.

    ReplyDelete
    Replies

    1. nanga 11th padikkum bothu new syllabus vandhuchu, apo itha solli than revision test varaikkum single language paper attend pannom, loosu pasanga annual exam ku munnadi old method follow pannanunu solli cancel pannitanunga,

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி