தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு இரு மடங்காக உயர்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2018

தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு இரு மடங்காக உயர்கிறது

பணிக்கொடை உச்சவரம்பை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ‘பணிக்கொடை திருத்த மசோதா’ என்ற பெயரில் புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அங்கு இந்த மசோதா கடந்த 15–ந் தேதி நிறைவேறியது.இதைத்தொடர்ந்து இந்த மசோதாவை மாநிலங்களவையில் நேற்றுமத்திய தொழிலாளர்துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்வார்தாக்கல் செய்தார். இந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற வேண்டும் என ஏராளமான உறுப்பினர்கள் அவைத்தலைவரை கேட்டுக்கொண்டனர். அதன்படி உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறி இருப்பதன் மூலம், தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்கிறது. மேலும் பெண் தொழிலாளர்களின் பிரசவ விடுப்பை, பணி நாட்களாக கருதுவதற்கான அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்குவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி