Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மலரும் ஏர்செல் நினைவுகள்..!!!


முதன்முதலில் வந்த மொபைல் நெட்வொர்க் BPL....!
அப்போது இருந்த ஒரே நெட்வொர்க் அது தான்...! மோனோபோலி...!
1996 இறுதியில்,
இன்கமிங்கிற்கே நிமிடத்திற்கு எட்டு ரூபாய்..!


நோகியோ செல்போன் இரண்டு கடிகார பேட்டரி செல்கள் போட்டுக் கொள்ளும் வசதி கொண்டு செங்கல் அளவில் இருக்கும்...!

பல இடங்களில் டவர் எடுக்காது..! காம்பவுண்டு சுவர், மரக்கிளைகள், மொட்டை மாடி,பாலம்ஏறி நின்று, ஹலோ ..! ஹலோ...! கத்திக்கிட்டுத் திரியணும்..!
டவர் கட்டானாலும் எட்டு ரூவா காலி...!

பேஜர் என்ற பேஜார் ஒன்றைத் தூக்கி அலைந்த ஒரு இருண்ட காலமும் உண்டு..!

1998 ல் அடியெடுத்து வைத்த ஏர்செல்காரன் நிச்சயமாக ஒரு வரம்..!

இன்கமிங் ஃப்ரீ, அவுட் கோயிங் ஏர்செல் to ஏர்செல் ரு1.40, ஏர்செல் to மற்றவை ரூ2.80...!

அப்போது சிம்கார்டு 3750 ரூபாயோ, என்னவோ..? மாத வாடகை 675..! கால் சார்ஜ் தனி..! ஆட் ஆன் கார்டு சிம்களில் எத்தனை மணி நேரம் பேசினாலும் ஃப்ரீ காசே இல்லை.... ஆட்ஆன் கார்டுகள் காதலர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது.
ஆட்ஆன், CUG இரண்டையும் அறிமுகப்படுத்திய பெருமையுமே கூட எனதருமை ஏர்செல்லுக்கு மட்டுமே பொருந்தும்.

அன்று 9500 ரூபாய் விலையில் கிடைத்த நோகியோ 5110 கொம்பு வைத்த செல் வெகு பிரபலம்...!

அன்று மேல் பாக்கெட்டில் செல் வைத்து இருப்பதே ஒரு பெரிய ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகும்..!

இருபது வருடங்களாக ஏர்செல் என் உடன் இருந்து வந்துள்ளது..!

நல்லது, கெட்டது என எல்லா நிகழ்வுகளிலும் உடன் பயணித்தது...!

தற்போது நான் வேறு நெட்வொர்க் மாற முடிவு செய்து விட்டாலும் கூட ஏர்செல் சரியாக வேண்டும் என்பதே என் விருப்பம்..!

பழைய புல்லட், அம்பாஸடர், காண்டெசா,ஜிப்சி ஓட்டுனவங்க அதனை பெருமையாகச் சொல்வது போல தான் ஏர்செல்லும்...!

என்னுடைய எத்தனையோ தகவல் தொடர்புகளில் அது ஒரு பெரிய பங்கை வகித்துள்ளது...!

நன்றி மறப்பது நன்றன்று...! 😞😞🙏🙏 #Aircel

11 comments

 1. நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.......
  Sri Maan coaching center materials Conduct no : 8072230063

  TRB /TNPSC/TET/ ect.
  யாரும் வாங்கி படிக்க வேண்டம் because பிறர் coaching center materials வாங்கி பணத்துக்காக அதிக விலை க்கு விற்கப்படுகிறது....
  Coaching Center நடத்துவதில்லை Another coaching center Net உள்ளதை copy pani அவரின் name pout publication panuraga
  By பதிக்க பட்டோர்
  Salem
  Erode
  Chennai
  DHARMAPURI
  Karur ........... Etc

  ReplyDelete
 2. தங்களுக்கு வகுப்புகள் வேண்டுமெனில் காஞ்சிபுரம் 'யுவாளயா பயிற்சி மையத்திற்கு' வாருங்கள், இங்கு குறிப்புகள் தரபடாது, நீங்கள் தான் குறிப்புகள் எடுக்க வேண்டும் பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் மட்டுமே எடுக்கப்படும், மேலும் விவரங்களுக்கு www.yuvaalayatnpsc.com

  ReplyDelete
 3. Inum tamilnadu thaan micham........athaium kedi enaiko vithutaan

  ReplyDelete
 4. Mumm........Arcel best net work....... but.......

  ReplyDelete
 5. We pray for the AIRCEL to recover

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives