ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் லென்ஸ்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2018

ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் லென்ஸ்!!!


ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு பயன்படும்வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் லென்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதில் அவ்வாவ்போது புதுமையான அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளியிட்டதகவலில் கூகுள் லென்ஸ் என்ற வசதியைச் சோதனை செய்து வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.கூகுள் லென்ஸ் என்ற வசதியின் மூலம் பயனர்கள் எடுக்கும் புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை கண்டறிவது மட்டுமின்றி, ஒரு புகைப்படத்தில் உள்ள அனைத்து பொருட்களின் தகவல்களையும் தெரிவிக்க ஏதுவாகஇதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியானது பயனர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. கூகுள் போட்டோஸ்என்ற செயலியில் கூகுள் லென்ஸ் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான சோதனை ஓட்டங்கள் முதலில் நடத்தப்பட்டு அதன் வெற்றிக்கு பின்னரே தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த கூகுள் லென்ஸ் வசதியானது இதற்கு முன்னர் கூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் மாடல்களில் மட்டும் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ஆன்ட்ராய்டு பயனர்கள் அனைவருக்கும் வெளியாகி உள்ளது. ஆனால் ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கான வெளியீடு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி