பல்கலை, கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்துக்கு தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2018

பல்கலை, கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்துக்கு தடை

தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரி வளாகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளில், மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, ஜாதி, மத மற்றும் இன ரீதியான போராட்டங்களை, அவ்வப்போது நடத்துகின்றனர்.
இதனால், மாணவர்கள் மத்தியில், மோதல் ஏற்படுவதுடன், சமூக நல்லிணக்கம் கெடுவதாக, உயர்கல்வித்துறைக்கு கடிதங்கள் வந்துள்ளன.

சில தினங்களுக்கு முன், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த, ராமராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதில், சென்னை பல்கலையில், ஒரு குழுவினர் போராட்டம் நடத்தினர்.இதை தொடர்ந்து, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளில்போராட்டங்கள் நடத்த தடை விதிக்கும்படி, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பல்கலைகள், கல்லுாரி வளாகங்களில் தர்ணா, ஆர்ப்பாட்டம்,போராட்டம் போன்ற போராட்டங்களுக்கான தடை, நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, பல்கலை வளாகங்களில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. university ku ullaye jathi amaippugal vandhu kootam podratha motha nippattunga,

    ReplyDelete
  2. போராட்டம் நடத்தக் கூடாது.
    என்றால்
    (ஆளுபவர்களும்) management ல் உள்ளவர்களும் தவறே செய்ய வாய்பேஇல்லையா??????????

    பல்கலைக்கழங்களில்
    லஞ்சம்
    சாதிய ஆதிக்க தன்மை
    அரசியல் சித்து விளையாட்டு
    போன்ற வற்றையும் மாணவர்கள் எவ்வாறு எதிர் கொள்வார்கள்???????????
    அப்ப
    (ஆளுபவர்கள்) management செய்யும் தவறுகளை எப்படி எதிர்கொள்வது???????????????

    ReplyDelete
  3. ஒழுங்காக
    தவறுகள் நடக்காமல் இருந்தால்
    மாணவர்கள் ஏன் போராடப்போய்கின்றார்கள்?????????..........
    அப்ப அப்ப
    தவறுகள் களையப்பட வேண்டும்......
    இல்லையெனில்
    புரையோடி புண்ணாகி சீல் வைத்து systemத்தையே(management or government) கட் பண்ணி எடுத்து தூக்கி எறியும் நிலைக்குத் தள்ளப்படும்........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி