அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு: ஆயிரம் பேர் கடும் அவதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2018

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு: ஆயிரம் பேர் கடும் அவதி

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் விரிவுரையாளர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 3,250 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 1,000 பேர் பெண்கள். இவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக, அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் உபரி ஆசிரியர்களாக கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் நியமிக்கப்படுகின்றனர்.

10 ஆண்டுகளுக்கும் மேல், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு புதிய வருகைப்பதிவேடு உருவாக்கி, அந்த விதியை அரசே மீறுகிறது. பல ஆண்டுகள் பணி செய்த கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிக பணியாளர்களாகவே அரசு வைத்துள்ளது. இதனால், ஒவ்வொரு பெண் கவுரவ விரிவுரையாளரும் மகப்பேறு காலத்தில் கல்லூரிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்க வேண்டிய சூழல் உள்ளது.

குழந்தை பிறந்த பின்னர், விடுமுறை இல்லாத நிலையில் பாடம் நடத்துவதோடு, குழந்தைக்கு உணவளிக்க வேண்டியது என இரு வேலைகளுக்கும் மாறிமாறி அவர்கள் அலைந்து வருகின்றனர்.

இது அவர்களுக்கு உடல், மனரீதியான பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும், முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்ைகயும் எடுக்கவில்லை. கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மகப்பேறு விடுப்பு வழங்குவது இல்லை என்பது அரசின் கொள்கை முடிவு என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையிலாவது, தமிழக அரசு பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

1 comment:

  1. முட்டாப்பயல்களுக்கு எங்களின் வாழ்க்கை வீணாகிறதை பற்றி என்ன தெரியும். பகுதி நேரம் - 7000 சம்பளத்தில் நர்ஸ் வேலை - 7500 ல் காவலர் வேலை என்று போஸ்டிங் போட்டுவிட்டு கொள்ளை அடிப்பார்கள். போராடினால் ஏன் வேலைக்கு வந்தீர்கள் என்பார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தோம்? அடிமாட்டு வேலை போல குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தும் இந்த அரசு இந்தியாவிலேயே முதன்மையாக கல்வி துறையை கொண்டுள்ளதாக சொல்லும் இவர்களுக்க்கு மற்ற மாநிலங்களில் ஒரு சில மாநிலங்கள் முழு நேரமாக்கியுள்ளார்கள் என்பதும் தெரியாது. 20000 க்கு மேல் சம்பளம் உயர்த்தியுள்ளார்கள் என்பதும் தெரியாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி