வாட்ஸ்ஆப் : பணம் அனுப்ப இனி க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும்.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2018

வாட்ஸ்ஆப் : பணம் அனுப்ப இனி க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும்.!

இறுதியாக, வாட்ஸ்ஆப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சம் சோதனை பகுதியை (வாட்ஸ்ஆப் பீட்டா) வந்து அடைந்துள்ளது. அடுத்தது மிக விரைவில் அனைவருக்கும் உருட்டப்பட்டாலும் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் ஒரு புதிய மேம்படுத்தல் காணப்பட்டுள்ளது. அது ஒரு வாட்ஸ்ஆப் பயனரை, க்யூஆர் (QR) குறியீட்டை ஸ்கேனிங் செய்வதின் வழியாக பண பரிமாற்றத்தை நிகழ்த்த அனுமதிக்கிறது. அதாவது இனி வெறுமனே க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதின் வழியாகவாட்ஸ்ஆப் பேமெண்ட்களை நிகழ்த்தலாம் என்று அர்த்தம்.இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் (WhatsApp Payment) சேவையின் வழித்தடத்தின் வழியாக தான் கிடைக்கும் என்பதும், இந்த புதிய அம்சமானது, சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.18.93-ல் மட்டுமே அணுக கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 கூகுள் பிளே ஸ்டோரின் படி, இந்த வாட்ஸ்ஆப் பீட்டா அப்டேட் ஆனது நேற்று தான் வெளியிடப்பட்டுள்ளது.மேம்படுத்தப்பட்ட புதிய வாட்ஸ்ஆப்பில், செட்டிங்ஸ் -> பேமெண்ட்ஸ் -> நியூ பேமண்ட் விருப்பத்தில் உள்நுழைய, அங்கு இரண்டு விருப்பங்கள் அணுக கிடைக்கும்.

ஒன்று யூபிஐ ஐடி, மற்றொன்று ஸ்கேன் க்யூஆர் கோட். அதில் இரண்டாவது விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும் அதாவது க்யூஆர் குறியீட்டை ஸ்கேனிங் செய்யும் விருப்பம்.பின்னர் ஸ்கேனிங்கை நிகழ்த்த, யூபிஐ பின் (UPI PIN) சரிபார்ப்பு நிகழ்த்தப்படும். அதனை தொடர்ந்து தொகை சார்ந்த விவரங்களை உள்ளிடும்படி கேட்கப்படும். பின்னர் பணபரிமாற்றத்தை நிகழ்த்திக் கொள்ளவேண்டியதுதான்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி