தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2018

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்

பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கும் என்றும் அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.அதன்படி, நாளை பேரவை கூடுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதால் பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். அதில் பட்ஜெட் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக் கப்படும்.

நேரம் ஒதுக்கவில்லை

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குபடுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக கடந்த பிப்.22-ம் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் பிரதமரை சந்தித்து மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக பிரதமரிடம் நேரம் கோரப்பட்டது. ஆனால், நேரம் ஒதுக்கப்படவில்லை.தமிழக குழுவை பிரதமர் சந்திக்காததற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன. எனவே, பட்ஜெட் தாக்கல் முடிந்தும் நாளை மாலை அல்லது 16-ம்தேதி காலை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட லாம் என்று கூறப்படுகிறது.

17 comments:

  1. Budget announced la namaku edhum news varuma?

    ReplyDelete
    Replies
    1. avangalukku kajanala irukra panatha epdi gali pannalanu pesuvanga, namakku enna news vara poguthu

      Delete
  2. அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வணக்கம். உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு சம்பந்தமான வழக்கு முடிவுற்று ஓராண்டுகளுக்கு மேல் ஆயிற்று, நமது ஆசிரிய நண்பர்கள் சிலர் மறுசீராய்வு மனு செய்தனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதற்கிடையில் நாம் 30 முறைக்கு மேல் கல்வித்துறை அமைச்சர் அவர்ளையும், செயலர், துணைமுதல்வர், முதல்வர் அவர்களையும் சந்தித்து தகுதிகாண் (WEIGHTAGE) முறையை மாற்றக்கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கக்கோரியும் சந்தித்து மனு அளித்தோம். அதற்கு பதிலளித்த அமைச்சர் நம்மிடம் நேரிலும், ஊடகங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு பணிவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதுகுறித்த செயல்பாடுகள் எதுவும் தெரியவில்லை. இன்னும் அமைச்சரின் வார்த்தையின் மீது நமக்கு நம்பிக்கை இருந்தாலும், பல ஆசிரியர்கள் இதனை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். எனவே நம் வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கூடி விவாதித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளோம். ஆம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு தலைசிறந்த மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு Curiyasity petition அளித்து நமது வழக்கை வேறோரு அமர்வுக்கு (BENCH) கொண்டு வந்து மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைக்கும்படி வேண்டுகிறோம். நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் உங்களின் ஆதரவு மட்டுமே ...! எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் உங்கள் வழக்கின் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு உங்கள் மேலான ஆலோசனைகளையும், ஆதரவையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். சாவின் விளிம்பு என்பார்கள், 2013 ல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய அந்நிலையில்தான் உள்ளனர். எனவே நமது இறுதியான உறுதியான முயற்சிக்கு உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மிக்க நன்றி.....!


    இப்படிக்கு,
    மு.இராஜபாண்டி,
    அருப்புக்கோட்டை.

    ReplyDelete
  3. Replies
    1. Pls send tet metrials frnz
      9941928470

      Delete
    2. follow tntext books from 6th to 10th at least. don't go for materials prepared by someone else, prepare ur own,

      Delete
    3. 6to10th book enough bro. More then read,revision is important

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  4. அய்யா, தயவு செய்து கல்விக் கடனை தள்ளுபடி செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி