'சிங்கிள் டிஜிட்' காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2018

'சிங்கிள் டிஜிட்' காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்

சிவகங்கை தொடக்கக் கல்வித்துறையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 'சிங்கிள் டிஜிட்' பணியிடங்களே காலியாக உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்களாக 3,170 உள்ளன. சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டன.

இந்த உபரி பணியிடங்களில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 541 பணியிடங்கள் காலியாக உள்ளன. 1,992 உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்றப்படுவர்.இதனால் 3,170 காலிப்பணியிடங்கள், 1,178 ஆக குறையும்.மேலும் சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன.

இதன்மூலம் 2,018 காலியிடங்களே ஏற்படும். இந்த ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மேமாதம் நடக்க உள்ளது. தொடக்கக் கல்வித்துறையில் ஒன்றியசீனியாரிட்டியே கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 'சிங்கிள் டிஜிட்' காலியிடங்களே உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி