ராணுவத்தினர் குழந்தைகளின் கல்வி செலவு வரம்பு நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2018

ராணுவத்தினர் குழந்தைகளின் கல்வி செலவு வரம்பு நீக்கம்

போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளது.கடந்த, 1971 முதல், போரில் உயிர் நீத்த, ஊனமுற்ற,
காணாமல் போனராணுவ வீரர்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல், தொழில் முறை படிப்பு வரையிலான, கல்விக் கட்டணம், சீருடை, விடுதிச் செலவு முழுவதையும், மத்திய அரசு ஏற்றது.ஏழாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி, உயிர் நீத்தராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர கல்வி உதவித் தொகை, 10 ஆயிரம் ரூபாயாக, 2017ல், அறிவிக்கப்பட்டது.இதில், கல்விக் கட்டணம், சீருடை மற்றும் தங்குமிடச் செலவும் அடங்கும்.

ராணுவ அமைச்சகத்தின் இந்த உத்தரவால், ராணுவத்தினர் அதிருப்தி அடைந்தனர். 'இந்த வரம்பை நீக்க வேண்டும்' என, அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை வரம்பு நீக்கப்படுவதாக, ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், போரில் உயிர் நீத்த,ராணுவத்தைச் சேர்ந்த, உயர் அதிகாரி முதல், ஜவான்கள் வரை அனைவருக்கும், இந்த சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி