எல்.ஐ.சி.,யின் புதிய திட்டம் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2018

எல்.ஐ.சி.,யின் புதிய திட்டம் அறிமுகம்

தனிநபர் மற்றும் குடும்பம் சார்ந்த நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், எல்.ஐ.சி.,யின், 'பீமாஸ்ரீ' எனும் புதிய பாலிசி திட்டம், நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.
'பீமாஸ்ரீ' திட்டம், பங்குச்சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்கேற்கும், குறிப்பிட்ட காலம் மட்டுமே, பிரீமியம் செலுத்தும் பாலிசியாகும்.இதில், 8 வயது முதல் 55 வயது வரை, உள்ளவர்கள் சேரலாம்.பாலிசி காலம் 14, 16 ,18 மற்றும் 20 ஆண்டுகள்; பிரீமியம் செலுத்தும் காலம், 10,12,14, மற்றும் 16 ஆண்டுகள் ஆகும்.பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர தவணைகளில் செலுத்தலாம். திட்டத்திற்கான, குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.10 லட்சம்; அதிகபட்சவரம்பு இல்லை.முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு, 55 ரூபாய் வீதம், உத்தரவாத தொகையும், 6வது ஆண்டில் இருந்து, பிரீமியம் செலுத்தும் காலம் வரை, 55 ரூபாய் வீதம், உத்தரவாத தொகையும், விசுவாச தொகையும் அளிக்கப்படுகிறது.மேலும், திட்டத்தில் வாழ்வு கால பயன், முதிர்வு தொகை பயன், இறப்பு தொகை பயன் என, மூன்று விதமான பயன்கள் உள்ளன. வாழ்வு கால பயன்களை, குறித்த காலத்தில் பெற, பணம் தேவைப்படும் நேரத்தில் விண்ணப்பித்தால், பணமீட்பு தொகையுடன், வட்டியும் வழங்கப்படும்.

முதிர்வு தொகையை, மொத்தமாக பெற, மாற்றாக ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் அல்லது 15 ஆண்டுகளில், தவணை முறையாக மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும்முழு ஆண்டு தவணையிலும் பெற்றுக் கொள்ளலாம்.அதே போல், இறப்பு உரிம தொகையையும், தவணை முறையிலோ அல்லது மொத்தமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி