'ஸ்மார்ட்' கார்டு பிழை திருத்தம் : இணையதள வசதி மீண்டும் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2018

'ஸ்மார்ட்' கார்டு பிழை திருத்தம் : இணையதள வசதி மீண்டும் துவக்கம்

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகளை 'www.tnpds.gov.in' என்ற, இணையதளம் வாயிலாக, மேற்கொள்ளும் வசதியை 2017ல் உணவு துறை துவக்கியது.
சிலர், வேண்டுமென்றே தவறான தகவல்களை பதிவு செய்ததால், இணையதளம் வாயிலாக மேற்கொள்ளும் பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டன.இதுகுறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டுக்காக, மக்களிடம் வாங்கிய 'ஆதார்' விபரத்தில், புகைப்படம் தெளிவாக இல்லை.

இதனால், சரியான புகைப்படத்தை, இணையதளம் வாயிலாகவும், பதிவேற்றம் செய்யலாம் என மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர், நடிகர், நடிகையர் படங்களை வேண்டுமென்றே தவறாக பதிவிட்டனர். இதனால் இணையதளத்தில், திருத்தம் மேற்கொள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, ஸ்மார்ட் கார்டு பணி முடியும் தருவாயில் உள்ளதால், மீண்டும் இணையதள திருத்தம் வசதி துவக்கப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி