மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை : நாடாளுமன்றத்தில் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2018

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை : நாடாளுமன்றத்தில் தகவல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி எம்.பி-க்கள் கடும் அமளியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 13 நாட்களாக நாடாளுமன்ற அலுவல் பணிகள் முடங்கியுள்ளன. இருப்பினும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்கள் தாக்கல் செய்யப்பட்டு அவைக்குறிப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என பதிலளித்தார். மேலும் நாடு முழுவதும் சுமார் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர் என தகவல் கூறினார்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி