சொந்த செலவில் அரசு பள்ளியை நவீனமயமாக்கிய தலைமை ஆசிரியை: பரிசுகளை வாரிக்குவித்து கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2018

சொந்த செலவில் அரசு பள்ளியை நவீனமயமாக்கிய தலைமை ஆசிரியை: பரிசுகளை வாரிக்குவித்து கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள்


 பாடங்களை வழக்கம்போல இல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்தவாறு நடத்தினால் அனைவரும் முதல் மாணவர்களாகவே திகழ்வார்கள் என்பதற்கு உதாரணமாக திருப்பத்தூரில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது போட்டிகளிலும் பரிசுகளை வாரிக்குவித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

சொந்த செலவில் பள்ளியை நவீனமயமாக்கிய தலைமை ஆசிரியர்
சுவர் நிறைய சித்திரங்கள், ஏராளமான பரிசுகள், பதக்கங்கள், தூய்மையான சூழல் என காண்போரை ஆச்சரியமடைய வைக்கிறது திருப்பத்தூர் அருகே உள்ள ராஜவூர் அரசு தொடக்கப்பள்ளி. இயல், இசை, நாடகம் என கற்பித்தல் முறையே மாறி இருப்பதால் இங்குள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது. பள்ளியும் அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரமும் உயர வேண்டும் என்றால் ஆசிரியரின் பங்களிப்பு நிச்சயம் வேண்டும். அப்படி மலையடிவாரத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருந்த இந்த துவக்க பள்ளியை, இதன் தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் நவீன பள்ளியாக மாற்றியிருக்கிறார்.

தமிழகத்தின் முன்மாதிரி பள்ளியாக தேர்வு
ராஜவூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, அறிவுத்திறன் போட்டி என விருதுகளையும், பதக்கங்களையும் வாங்கி குவித்துள்ளனர். மாணவர்களின் கல்வித்திறனை கண்டு இதனை தமிழகத்தின் முன்மாதிரி பள்ளியாக தேர்வு செய்திருக்கின்றனர். அரசின் மெத்தனப்போக்கால் ஏராளமான அரசு பள்ளிகள் மூடப்பட்டுவரும் காலத்தில், ராஜவூர் அரசு தொடக்கப்பள்ளி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுபோன்ற பள்ளிகளுக்கு அரசு தேவையான உதவிகளை செய்துவந்தால், பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை குறையும் என்பது கல்வியாளர்களின் நம்பிக்கையாகும்.  

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி