ஆசிரியர்கள் வகுப்பில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2018

ஆசிரியர்கள் வகுப்பில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி அளித்தும், துப்பாக்கிகளை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 21-ஆக உயர்த்தியும் அந்த மாகாண அரசு சட்டம் நிறைவேற்றியது.

ஃபுளோரிடா மாகாணம், பார்க்லாண்ட் நகரிலுள்ள மெஜாரிட்டி ஸ்டோன்மேன் பள்ளியில் நிக்கோலஸ் ஜேக்கப் குரூஸ் என்ற முன்னாள் மாணவர் கடந்த 14-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார். இந்தத் தாக்குதலில் 14 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் பலியாகினர்.
இந்த நிலையில், பள்ளிகளில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, துப்பாக்கி வைத்திருப்பதற்கான குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 21-ஆக அதிகரிப்பதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தார்.

மேலும், மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ஆசிரியர்கள் வகுப்பில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியை வழங்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த இரு அம்சங்களையும் கொண்ட சட்ட மசோதாவை ஃபுளோரிடா நாடாளுமன்றம் புதன்கிழமை நிறைவேற்றியது.
எனினும், "மெஜாரிடி ஸ்டோன்மென் டக்ளஸ் பள்ளி பொதுப் பாதுகாப்புச் சட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா, மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட்டின் ஒப்புதலைப் பெறுமா என்று சந்தேகம் நிலவி வந்தது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான ரிக் ஸ்காட், துப்பாக்கி வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் இந்த விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது.
இந்தச் சூழலில், புதிய வரைவு மசோதாவில் ஆளுநர் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதையடுத்து, அந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி