மொபைல் எண் - ஆதார் இணைப்பு சரிபார்ப்பு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2018

மொபைல் எண் - ஆதார் இணைப்பு சரிபார்ப்பு!!!

மொபைல் எண்கள் சம்பந்தப்பட்ட நபர்களின்ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தரும்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆபரேட்டர்களும், ஏஜெண்ட்களும், புதிய சிம் கார்டு வழங்குவதிலும், மொபைல் எண் மறுபரிசோதனையின் போதிலும் அந்த மொபைல் எண்ணுக்குச் சொந்தமானவரின் ஆதார் விவரங்களுக்குப் பதிலாக வேறு விவரங்களைப் பயன்படுத்தியதை ஆதார் ஆணையம் சமீபத்தில் கண்டறிந்தது. இதனால் மொபைல் எண் - ஆதார் இணைப்பு விதிமுறைகளை ஆதார் ஆணையம் கடுமையாக்கியுள்ளது. மேலும், சில்லறை விற்பனையாளர்கள், ஏஜெண்ட்கள் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடாமல் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும், மொபைல் சந்தாதார்கள் தங்களது மொபைல் எண்ணானது ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் எஸ்எம்எஸ் வாயிலாகத் தகவல் தரும் வசதியை ஏற்படுத்தித் தரும்படி ஆதார் ஆணையம் தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஆதார் - மொபைல் எண் இணைப்பில் இதுவரையில், செயல்பாட்டிலிருக்கும் 142.9 கோடி மொபைல் எண்களில் சுமார் 85.7 கோடி மொபைல் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணைய அதிகாரி ஒருவர் எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி