இடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் வேறுபாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2018

இடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் வேறுபாடு

தமிழகத்தில் ஒரே நிலையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில், 2009க்கு பின் பணியில் சேர்ந்தோரின் சம்பள நிர்ணய பாரபட்சத்தால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதிய குழு பரிந்துரையைமத்திய அரசு 1.1.2006 முதல் அமல்படுத்தியது. இடைநிலைஆசிரியருக்கு அடிப்படை ஊதியம் 4500 ரூபாயில் இருந்து (1.86 மடங்கு) 9300 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இத்துடன் கூடுதலாக 4200 தர ஊதியம் (கிரேடு பே) வழங்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86 மடங்கு என்ற உயர்வின்றி அடிப்படை ஊதியம் 4,500 லிருந்து 5,200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

பின் நடந்த போராட்டங்களால் 1.6.2009க்கு முன் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 4500 ரூபாயில்இருந்து 8370 ரூபாய் என உயர்த்தி சம்பள நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால், 1.6.2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86 மடங்கு அதிகரிப்பு பின்பற்றப்படவில்லை. இதனால் அவர்களுக்கு 5200 ரூபாய் (தர ஊதியம் 2800 ரூபாய் தனி) என்ற சம்பள அடிப்படையே இதுவரை பின்பற்றப்படுகிறது. இதில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடக்கப் பள்ளிஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன, "ஆறாவது ஊதிய குழுவில் ஏற்பட்ட பாதிப்பால் ஒரே பள்ளியில், 1.6.2009க்கு முன் மற்றும் பின் நியமனமான ஆசிரியருக்கு இடையே 14800 ரூபாய் வரை வேறுபாடு உள்ளது.ஏழாவது ஊதிய குழுவிலும் இப்பாதிப்பு தொடர்கிறது. இவற்றை நீக்கி நியாயமான சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்," என்றார்.

3 comments:

  1. otha dai eppada posting podveenga

    ReplyDelete
  2. இவன் தான் போராட்டம் ஏதும் செய்யாமல் அரசுக்கு சொம்படிக்கிறார்

    ReplyDelete
  3. *_🖥பள்ளிக்கல்வி - தொழில்கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடம் அனுமதிக்கப்பட்ட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் கோருதல் சார்பு_*

    *🖥அனைத்து அரசு நகராட்சி/மாநகராட்சி/மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட விவரம்,பணியிடம் நிரப்பப்பட்ட விவரம் மற்றும் 15.03.2018 ல் உள்ளவாறு பூர்த்தி செய்து 01.04.2018க்குள் அனுப்ப கோருதல் சார்பு - இணை இயக்குநர் தொழிற்கல்வி*

    *🗓 நாள்: 19/03/2018*


    📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/15032018-01042018-19032018.html?m=1

    More News Visit kaninikkalvi.blogspot.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி