கூட்டமே கூட்டாத ஓய்வூதிய வல்லுனர் குழு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2018

கூட்டமே கூட்டாத ஓய்வூதிய வல்லுனர் குழு

சிவகங்கை:ஓய்வூதிய வல்லுனர் குழு 2018 ல் 2 முறை நீட்டிக்கப்பட்டும் ஒருமுறை கூட கூடவில்லை என, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய 2016 பிப்., 26 ல் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இதுவரை 7 முறை நீட்டிக்கப்பட்டும், அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மார்ச் 31 ல் இக்குழுவின் இயங்கு காலம் முடிகிறது.ஓய்வூதிய மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு நிதித்துறை பதில் அளித்துள்ளது.

அதில் 2016 ல் மார்ச் 28, செப்., 15, 16, மற்றும் 22, அக்., 6, டிச., 2 ல் குழு கூடியது. 2017 ல் மார்ச் 9, செப்., 6, அக்., 20, டிச., 20 ல் குழு கூடியதாக தெரிவித்துள்ளது. கூட்டப் பொருள் குறித்து தகவல் தர மறுத்துவிட்டனர். மேலும் 2018 ல் மட்டும் இக்குழு ஜன., 4, பிப்., 15 என, 2 முறை நீட்டிக்கப்பட்டன. இக்குழு ஒருமுறை கூட கூட்டம் நடத்தவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: எங்களை ஏமாற்றவே வல்லுனர் குழுவை தொடர்ந்து நீட்டித்து வருகின்றனர். அதன் இயங்குகாலம் 22 தினங்களே உள்ளநிலையில் இந்த ஆண்டு ஒருமுறை கூட கூடவில்லை. மேலும் கூட்டம் பொருளும் தர மறுக்கின்றனர். இதனால் எதர்காக கூடினார்கள் என்றே தெரியவில்லை, என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி