உயர்கல்வி நிர்வாகத்தில் மாற்றம் செய்ய கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2018

உயர்கல்வி நிர்வாகத்தில் மாற்றம் செய்ய கோரிக்கை

உயர்கல்வி நிர்வாகத்தில், மாற்றம் ஏற்படுத்த வேண்டும்' என, 'நெட், செட்' சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, 'நெட், செட்' பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர், பேராசிரியர் மதுசூதனன் கூறியதாவது:
பல்கலைகளில், ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் துணைவேந்தர்கள் மீது, கவர்னர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நியமனங்களில், பேராசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் குழுவின் அறிக்கையை, அந்தந்த பல்கலையின் இணையதளத்தில்வெளியிட வேண்டும்.

பல்கலைகள் மற்றும் பேராசிரியர்கள் குறித்த புகார்களின் விபரங்களை யும், கவர்னர் அலுவலகம் வெளியிட வேண்டும்.பல்கலைகளின் நிதி நிலவரம் குறித்த, வெள்ளை அறிக்கை தேவை. பல்கலை துணைவேந்தர்களை, நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் தேர்வு செய்யவேண்டும்.பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு மோசடியில், இதுவரை, தனியார் நிறுவனம் மற்றும் இடைத்தரகர்களை சுற்றியே விசாரணை நடக்கிறது.

இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து, விசாரிக்கப்பட வேண்டும்.அரசு கல்லுாரிகள், பல்கலைகளில், கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பது, சுயநிதி கல்லுாரிகளில் ஆசிரியர்கள் நியமனம், உறுப்பு கல்லுாரி ஆசிரியர்கள், நுாலகர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் ஆகிய நியமனங்களில், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளை பின்பற்ற வேண்டும். உயர்கல்வியின் நிர்வாக முறைகளில், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

15 comments:

  1. இந்த டிஇடி தேர்வு போல உதவி பேராசிரியர் நியமனத்திற்கும் ஏதாவது ஒரு பொது தேர்வு வைத்து அதன் மூலமாக நியமனங்களை நடத்தலாம்

    ReplyDelete
    Replies
    1. Set net examnu onnu attend panni pass pannunavanga thirummba exam aluthuvangala enna pesuringa apparam athukku set net exam. . Summa theva ellatha karuthalam pesathinga.. ..

      Delete
  2. yes we want exam an assistant professor in arts and science also

    ReplyDelete
  3. Exam should be conducted only for those who didn't qualify in NET/ SLET

    ReplyDelete
    Replies
    1. Ethu correct again appudi set net pass pannunavanga exam eluthuvanga enna exam eluthikkittea erukarathu than polappa posting podama...

      Delete
  4. பொதுவான உதவி பேராசிரியர் தேர்வை வைத்து அரசு,அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தில் தேர்ச்சி பெற்றோரை உதவி பேராசிரியராக நியமனம் செய்யலாம்.

    ReplyDelete
  5. they should conduct exam like engineering college lecturer trb. minimum qualification should either be net or set or phd, and then final board exam of higher order difficulty. and then final transparent interview with proper video footage. otherwise only money can buy the post.....

    ReplyDelete
  6. college lecturer trb. minimum qualification should either be net or set or phd, and then final board exam of higher order difficulty. and then final transparent interview with proper video footage. otherwise only money can buy the post.....

    ReplyDelete
  7. Trb should Conduct exam to select Asst. Pro

    ReplyDelete
  8. UG, PG, NET / SLET, Fulltime Ph.D , PDF, teaching experience, Post doctoral experience UGC இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜர்னல்களில் வெளிபிடப்படும் ஆய்வு கட்டுரைகளுக்கு மதிப்பெ ண் என்ற முறையை பின்பற்றுங்கள் முறைகேடு எவ்வாறு நடக்கும் என பார்க்கலாம். இதைத்தானே UGC பின்பற்ற வலியுறுத்துகிறது.மேற்கூறிய அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒருவரை தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை கொடுங்கள் அதை தவிர்த்து பகுதி நேர முனைவர் பட்டமும் சுயநிதி அறிவியல் கல்லுரியில் அனுபவமும் கொண்டவர்களை மட்டும் தேர்ந்தெடுத்தால் அது முறைகேடன்றி வேறென்ன?

    ReplyDelete
  9. கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகு ப்ஊதியம் உயர்த்தப்படுவதாக தகவல்

    ReplyDelete
  10. கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகு ப்ஊதியம் உயர்த்தப்படுவதாக தகவல்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி