தனியார் பள்ளிகளுக்கு வருகிறது ஆப்பு - செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2018

தனியார் பள்ளிகளுக்கு வருகிறது ஆப்பு - செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கை!!!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனியார்பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி அமைச்சரவை தலைமையேற்றபோது பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செங்கோட்டையன். இவர்பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்து நற்பெயர் வாங்கி வருகிறார்.அதாவது நீட்டை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்கள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களின் பொதுதேர்வு குறித்த அறிவிப்புகளும் மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வரவேற்பைபெற்றுள்ளது.இதனிடையே பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர்களை வெளியிடும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் சமூக சேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும், +2 படித்தாலே வேலை நிச்சயம் என்ற சூழலை உருவாக்குவோம், விரைவில் யாழ்ப்பாண நூலகத்துக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் என அடுத்தடுத்து நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறார் செங்கோட்டையன்.

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிந்தவரை அரசியல் வாதிகளே

      Delete
  2. Semma comedy sengottaian nallave panringa

    ReplyDelete
  3. இவரு அப்படியே செஞ்சிட்டாளு... கொல்லு பட்டாசு .... தனியார் காப்பாற்றுவது தான் இவங்க வேலை

    ReplyDelete
  4. பெரும்ப பாலான தனியார் பள்ளிகளை நடத்துவதே அரசியல் வாதிகள்
    மற்றும் அவர்பிகளதுனாமிகள்

    ReplyDelete
  5. Sir, For last 6 month you did not do anything, only build up.

    ReplyDelete
  6. Yes built up minister....m
    Only scene

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி