CPS வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2018

CPS வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படுமா?

*CPS NEWS:*

*CPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்யாமல் தமிழக அரசிடம் விரைந்து அறிக்கை வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று (05.03.2018) நீதியரசர் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.*

*நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பதில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை.*

3 comments:

  1. 94 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்!

    (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA,தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA அவர்களின் கூட்டறிக்கை)

    2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இதுவரை 94,000 பேர் பணி கிடைக்காமல் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கபெற்று பணிக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

    கடந்த ஐனவரி மாதம் அரசிடமிருந்து 2013 தேர்ச்சி பெற்றோருக்கு ஒரு வார காலத்தில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அது இன்று வரையிலும் செயல்வடிவம் பெறாமல் இருப்பதும், அதே வேளையில் தற்சமயம் 01:03:2018 அன்று புதியதாக ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தப்படும் என்று சொல்வது அவர்களுக்கு மிகுந்த அச்சத்தையும் மன உளைச்சலையும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் ஒட்டு மொத்த தேர்வர்களின் பணி நியமனம் குறித்த எதிர்பார்ப்பும் கேள்வி குறியாக உள்ளது.

    தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காத சூழலில் மீண்டும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுத சொல்வது என்பது தவறான நிலைப்பாடாகும். அது மடடுமல்லாமல் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை மீண்டும் தேர்வு எழுத சொல்வது ஜனநாயக முறைக்கு எதிரானதாக உள்ளது.

    எனவே அரசு அறிவித்தபடி2013ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து தற்சமய பணியிடங்களை வழங்கி இந்த அரசு 94,000 பேரின் வாழ்வாதாராத்தை காத்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

    இவண்;
    மு.தமிமுன் அன்சாரி MLA,
    உ.தனியரசு MLA,
    கருணாஸ் MLA,
    5/03/2018.

    ReplyDelete
  2. எவனும் எதுவும் செய்ய மாட்டான். போஸ்டிங்கே போடமாட்டங்க.

    ReplyDelete
  3. What about computer Teacher posting₩

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி