'NEET' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2018

'NEET' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு

தமிழகத்தில் 'நீட்' உட்பட போட்டி தேர்வுக்காக ஒன்பது மாவட்டங்களில் உறைவிடப் பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு 412 போட்டி தேர்வு மையங்களில் சனி, ஞாயிறு பயிற்சி அளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு மதிப்பெண், நடப்பு கல்வியாண்டு செயல் திறன், கற்றல் திறன் அடிப்படையில், 2920 பேர் தேர்வு செய்யப்பட்டு ஒன்பது மாவட்டங்களில் ஒரு மாதம்உறைவிடப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் பெற்றோர் ஒப்புதல் கடிதமும் பெறப்படுகிறது.தமிழ் வழியில் திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மையங்களில் 2000 மாணவருக்கும், ஆங்கில வழியில் சென்னை, ஈரோடு, கோவில்பட்டி மையங்களில் 920 மாணவருக்கும் ஏப்., 5 முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தனித்தனியாக தங்கும் வசதி உள்ளது.

மதுரை முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து கூறுகையில், ''மதுரையில் இருந்து 289 மாணவர்கள் திண்டுக்கல், துாத்துக்குடி மையங்களுக்கு உறைவிடப் பயிற்சிக்கு செல்கின்றனர்,'' என்றார்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Apdinna darmapuri, krishnagiri, thiruvannamalai engalukku oru miurum illa, kadaisi varikum engamavattam pinthangiee irukkanam.bloody politicians and Co ging chak officers

    ReplyDelete
  3. Apdinna darmapuri, krishnagiri, thiruvannamalai engalukku oru miurum illa, kadaisi varikum engamavattam pinthangiee irukkanam.bloody politicians and Co ging chak officers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி