1-8 மாணவர்களுக்கு பழைய சீருடைதான் வழங்கப்படும்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2018

1-8 மாணவர்களுக்கு பழைய சீருடைதான் வழங்கப்படும்!!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழைய &'லைட்பிரவுன்&' மற்றும் &'மெரூன்&' நிற சீருடையில் மாற்றம் இல்லை; மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாற்றப்பட்ட சீருடை விபரம் சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி இயக்குனர் இளங்கோவன், &'நடப்பு கல்வியாண்டு (2017--18) பயன்படுத்த வேண்டிய சீருடை குறித்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், &'அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாம்பல் நிறத்தில் பேண்ட், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட சட்டை, சட்டை மேல் மாணவியருக்கு சாம்பல் நிறத்தில் ஒரு கோட் சீருடையாக அணிய வேண்டும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கருநீல நிறத்தில் கோடிட்ட மேல்சட்டை, மாணவியர் கருநீல கோட்டு சீருடையாக அணிய வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் போட்டோவுடன் சி.இ.ஓ., அலுவலகத்துக்கு வந்துள்ளது. 

2 comments:

  1. KALVISOLAI IS VERY USEFUL TO ALL.THANK YOU FOR GIVING THIS NEWS.

    ReplyDelete
  2. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

    தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

    தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

    உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

    புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

    சக்திவேல் நாமக்கல் - 9786138394

    ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி