10ம் வகுப்பு பாடம் நடத்தாதவர்கள் விடைத்தாள் திருத்த அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2018

10ம் வகுப்பு பாடம் நடத்தாதவர்கள் விடைத்தாள் திருத்த அழைப்பு

சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு 10ம் வகுப்பிற்குபாடம் நடத்தாத பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நாளை 24 ந் தேதி சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் நடக்க உள்ளது.விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு சிவகங்கை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில்10ம் வகுப்பிற்கு பாடம் நடத்தாத ஆசிரியர்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 10ம் வகுப்பிற்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மாணவர்கள் எழுதிய கருத்தை உள்வாங்கி மதிப்பெண்களை வழங்குவர். ஆனால் பாடம் எடுக்காத ஆசிரியர்கள் 'கீ ஆன்சர்களை' மட்டும் கொண்டு மதிப்பெண்வழங்குவதால், மாணவர்கள் உரிய பதிலை கருத்தோடு எழுதியிருந்தாலும் குறைவான மதிப்பெண்கள் கிடைக்கவாய்ப்புள்ளது. ஆங்கிலத்திற்கு பணி மூப்பு அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்கள் இல்லாமல் வேறு பாடங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் திருத்த வாய்ப்புள்ளதால் மதிப்பெண் குறைய வாய்ப்புஉள்ளது, என்றார்.

பள்ளி கல்வி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது: விடைத்தாள்களுக்கு ஏற்பபட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது, பாடம் எடுக்காத ஆசிரியர்கள் இருந்தால்திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆங்கில பாடத்திற்கு ஆங்கில ஆசிரியர்களைகொண்டு திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி