1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விலையை 20% உயர்த்த பாடநூல் கழகம் திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2018

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விலையை 20% உயர்த்த பாடநூல் கழகம் திட்டம்

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
மற்ற வகுப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் புத்தகங்களின் விலை உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் 1-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அப்போது 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த நான்கு வகுப்புகளுக்கான பாடப்புத்தக விலையை 20% உயர்த்த பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாராப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை உயர்வு அரசுப்பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் அவர்களுக்கு வழக்கம் போல் விலையில்லா புத்தகம் தமிழக அரசு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விலை உயர்வு காரணம்

தரமான தாளில் பாடப்புத்தகங்கள் அச்சிடுவது, அதிக அளவில் வண்ணப்படங்களை சேர்ப்பது, புத்தகத்தின் முதல் மற்றும் பின் பக்க அட்டைகள் சேதம் அடையாமல் இருக்க லெமினேஷன் செய்வது உள்ளிட்ட காரணங்களால் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது என்றும் இதனால் விலை உயர்த்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி