Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வெ.இறையன்பு உட்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; ஆசிரியர் தேர்வு வாரியம் தலைவராக எஸ்.ஜெயந்தி நியமனம்

தமிழகத்தில் அசோக் டோங்ரே, வெ.இறையன்பு, எஸ்.ஜெயந்தி உட்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரி கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம் (பழைய பதவி அடைப்புக் குறியில்):

1.அசோக் டோங்ரே - ஆணையர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் (இயக்குநர், தொழில் முனைவோர் வளர்ச்சி, புது முயற்சிகள் நிறுவனம்) 2.வெ.இறையன்பு - இயக்குநர், தொழில் முனைவோர் வளர்ச்சி, புது முயற்சிகள் நிறுவனம் (ஆணையர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்) 3.எஸ்.ஜெயந்தி - தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம் (கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் இயக்குநர்) 4.எஸ்.செந்தாமரை - துணை செயலர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் (கூடுதல்இயக்குநர், வேளாண் துறை) 5.எஸ். அமர்ஜோதி - துணை செயலர், தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை (செயல் இயக்குநர், மகளிர் மேம்பாட்டுக் கழகம்) 6.டி.மோகன் - துணை செயலர் - மரபு, பொதுத் துறை (துணை செயலர், பொதுத்துறை) 7.சந்தியா வேணுகோபால் சர்மா - ஆணையர், ஆவணங்கள், வரலாற்று ஆய்வு (விடுப்பில் இருந்தார்).8.ஆர்.நந்தகோபால் - ஆணையர், தொழிலாளர் நலத் துறை (இணை ஆணையர், தொழிலாளர் நலத்துறை) 9.பி.குமரவேல் பாண்டியன் - கூடுதல் இயக்குநர், வேளாண் துறை (துணை ஆணையர், கலால்)10.டி.பாஸ்கர பாண்டியன் - சிறப்பு அதிகாரி, முதல்வர் தனிப்பிரிவு (டிஆர்ஓ, நீலகிரி) 11.எம்.விஜயகுமார் - மேலாண் இயக்குநர், எல்காட் (செயலர், டிஎன்பிஎஸ்சி) 12.எஸ்.பி.கார்த்திகா - தலைமை செயல் அதிகாரி(கூடு தல் இயக்குநர், சர்க்கரைத் துறை) 13.கில் சந்திரசேகர் - செயல் இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (சார் ஆட்சியர், மதுராந்தகம்) 14.பி.என்.ஸ்ரீதர் -இணை மேலாண் இயக்குநர், மின்வாரியம் (மேலாண் இயக்குநர், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்) 15.கே.கற்பகம் - மேலாண் இயக்குநர், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் (சிறப்பு டிஆர்ஓ, கோவை)16.ஜெ.ஆனி மேரி ஸ்வர்ணா - செயல் இயக்குநர், மகளிர் மேம்பாட்டுக் கழகம் (உறுப்பினர் செயலர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்) 17.எஸ்.விசாகன் - செயல் இயக்குநர்,தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (மேலாண் இயக்குநர், தமிழ்நாடு தொழில் வர்த்தக மேம்பாட்டு நிறுவனம்).

இவ்வாறு தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

5 comments

  1. 2013 அல்லது 2017.....இப்படி தேர்ச்சி பெற்றவர்களால் இது நடைபெறவில்லை.... அரசால் தான் இப்படி நடக்கிறது

    ReplyDelete
  2. அவரவர் கோரிக்கை கொடுப்பது உரிமை தோழரே.... அதை தடுக்க முடியாது..... பணி நியமனம் செய்வதற்கு அரசு விதிமுறை சில உள்ளது.... அது அரசனை 71.....உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.... பின் ஏன் இந்த கோவம்.... அனைவருமே பதிக்கப்பட்டிருக்கிறோம்

    ReplyDelete
  3. உயர் மட்ட அதிகாரிகள் பணியிட மாற்றத்திற்கும் நான் தான் காரணம் என டக்லஸ் ராஜ லிங்கம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்..... மனதில் ராஜ ராஜ சோழன் என்று நினைப்பு....... பாவம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives