தனியார் பள்ளியில் இலவச ஒதுக்கீடு சேர்க்கை வரும் 20 முதல் 'ஆன்லைன்' விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2018

தனியார் பள்ளியில் இலவச ஒதுக்கீடு சேர்க்கை வரும் 20 முதல் 'ஆன்லைன்' விண்ணப்பம்

கட்டாய கல்வி உரிமை சட்ட ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர்களை சேர்க்க, வரும், 20 முதல் மே, 18 வரை விண்ணப்பிக்கலாம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,
சுயநிலை பள்ளிகளின் நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீதம் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படுகிறது.

இச்சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற, தமிழக அரசு கூடுதல்அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவுநிலை வகுப்பில் (எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பு), 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர, ஏப்., 20 முதல் மே, 18 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏதுவாக, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர், அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே அதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவான பின், பெற்றொரின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி க்கப்படும். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உதவிதொடக்க கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலகங்களில், எவ்வித கட்டணமும் இல்லாமல், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.மாவட்டத்தில் உள்ள, 'இ--சேவை' மையங்களிலும் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை காட்டிலும், அதிக விண்ணப்பம் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் தேர்வு நடக்கும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர், ஆதரவற்றவர், எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, குலுக்கல் நடக்கும் முன்பாகவே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.அரசு வழிகாட்டுதலின்படி, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. இந்த இட ஒதுக்கீடு CBSE பள்ளிகளுக்கு பொருந்துமா???

    ReplyDelete
  2. 2013 tet chemistry tamil medium irunthal please call me 9566259330

    ReplyDelete
  3. 2013 tet chemistry tamil medium irunthal please call me 9566259330

    ReplyDelete
  4. CBSE, PORUNTHUM ANAIVARUKUM THERIYAPADUTHAUM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி