4,000 அரசு ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் வேலை இல்லை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2018

4,000 அரசு ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் வேலை இல்லை!!

அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால், 4,000 ஆசிரியர்களுக்கு, பாடம் நடத்தும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கல்வித் தரம் மற்றும் கற்பித்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன.

அரசின் சார்பில், 27 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என, பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. இதற்கு, பல ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல், 'ஓபி' அடிப்பதும், அலுவலக பணி என, ஊர் சுற்றுவதுமே காரணம்.இதுபோன்ற காரணங்களால், ஐந்து ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், மாணவர்களின் விகிதாச்சாரத்தை விட, ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால், 4,000 ஆசிரியர்கள் பயிற்றுவிக்க, பள்ளிகளில் மாணவர்கள் இல்லாத நிலை உள்ளது.
இந்த பிரச்னையை அறிந்துள்ள கல்வித்துறை, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிக்கவில்லை. மாறாக, அந்த ஆசிரியர்களை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, காலியிடங்களில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகள் மூடப்படுமோ என்ற அச்சம், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், கல்வித் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைய காரணமான, பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை விடுத்து, ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதால், அந்த ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அவர்கள் பணியாற்றிய பள்ளியில், புதிய மாணவர்கள் சேர மாட்டார்கள். அதனால், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்படும்.

14 comments:

  1. U the govt is reluctant in appointing new teachers in vacant places in govt schools. U r not ready to appoint teachers. U the fool govt assign extra duty to teachers other than teaching. In teaching time teachers have to collect textbooks, uniforms, notebooks, geometry box,chappals,laptops,tablets and the likes. U simply waste the poorman's tax money to such things.majority of the students don't use these freebies.no toilets, no proper and hygenic rest rooms in govt schools.having this much of drawbacks in u howdare u fools blame the teachers?

    ReplyDelete
  2. U the govt is reluctant in appointing new teachers in vacant places in govt schools. U r not ready to appoint teachers. U the fool govt assign extra duty to teachers other than teaching. In teaching time teachers have to collect textbooks, uniforms, notebooks, geometry box,chappals,laptops,tablets and the likes. U simply waste the poorman's tax money to such things.majority of the students don't use these freebies.no toilets, no proper and hygenic rest rooms in govt schools.having this much of drawbacks in u howdare u fools blame the teachers?

    ReplyDelete
  3. Padam nadatha teachersai viduvathillai matha velaikalukku payanpaduthinal epdi government school tharam uyarum students epdi seruvarkal government than karanam

    ReplyDelete
  4. 100 க்கு 5% அப்படி ஒபி அடிக்கிறார்கள் ஆனால் உண்மையில் அரசு ஆசிரியர்கள் குழந்தைகளை தங்களுடைய பிள்ளைகளாக ஏற்றுவதால் பாடம் கற்பிக்கிறார்கள். ஏதோ ஒரு நல்ல ஆசிரியரால் தான் இன்று நாம் எழுத்தையாவது கற்றுள்ளோம். எதிர்மறையான எண்ணத்தை விடுங்கள். தண்டனை சரிதான். ஆனால் யார் தவறு செய்தாலும் தண்டனை பெறுவது ஆசிரியர் மட்டும்தான். ஆசிரியரை வஞ்சிக்கும் எந்த சமூகமும் முன்னேற்றம் காணாது. ஆசிரியரை வாழ்ந்த தேவையில்லை. குறை சொல்லாமலாவது இருப்போம். மாதா பிதா குரு( ஆசிரியர் என்பதை மறவாதே மானிதா😈😈😈😢) போற்றுவோம். ...

    ReplyDelete
  5. இங்கு பல ஆசிரியர்கள் ஓபி அடிக்கின்றனர்.என்பது கண்டிக்கத்தக்கது.சிலர் செய்யும் தவறுகளை பலரது தலையில் சுமத்துகின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய நிறையகாரணங்கள் உண்டு.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தற்போதுதான் திறமையான ஆசிரியகள் உள்ளனர்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை கௌரவம் குறைவாக கருதுவதே முதன்மை காரணமாகும்.என்பதை இங்கு தெளிவாக பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  6. ஊதிய உயர்வுக்கும், கூடுதல் நிதிக்கும், பென்சனுக்கு மட்டும் கொடி பிடிக்கும் ஜேக்டோ - ஜியோ கூட்டமே....

    வரலாற்றில் உன் சுயநலம் பதிவாகப் போகிறது.. தடுத்து நிறுத்து...

    (நன்கொடை பல லட்சம் கொடுத்து பணியில் சேர்ந்த) அரசு உதவிபெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்றுவதை உன்னால் தடுக்க இயலாதது ஏன்??

    இவன்
    தமிழ்நாடு புரட்சிகர ஆசிரியர் சங்கம் (TNPAS)

    ReplyDelete
    Replies
    1. Enda sambar aided school salary un vetula iruntha thra govt thana tharathu excess iruntha change pannina enna mistake iruku en Vera engayum poi kuppa kotta mudiyatha OK OK athuku nanga onnum pannamudiyathu 😂😂😂😂

      Delete
    2. Mr.Rajalingam 21 month arrear than ketkurom. Neenga velai parthal increment ketka matteengala? Navadakkam vendum.

      Delete
  7. தனியார் பள்ளிகளை அதிக அளவில் திறப்பது அரசு.அதனால் அதனால் மாணவர் எண்ணிக்கை குறைகிறது.கழிப்பறை வசதி,குடி நீர் வசதி,இவற்றை அரசு செய்து தருவதில்லை.பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் கூட கிடையாது. பாதுகாப்பு குறைபாடு. எப்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள்? தனியார் பள்ளிகலைத்தான் நாடுவார்கள் அரசும் இதனைத்தான் விருப்புகிறது.

    ReplyDelete
  8. ஒரே தீர்வு அரசு சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தால் உண்மையாகவே ஆசிரியர்கள் உழைப்பார்கள்..

    ReplyDelete
  9. Arasu salary vangum teachers mattum Ella anaithu arasu uliyargalum arasu palliyil kulanthaikalai serkka vendum

    ReplyDelete
  10. All private school kum RTI nu oru scheme kondu vandhu 25 % student ku government fee pay panum bodhu epdi da government school la strength increase aagum arivaaaligalaaa

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் முகேஷ் மேலும் அரசுப் பள்ளிக்கு எந்த விழாக்களுக்கு அதிகாரி யோ அமைச்சரோ வருவதில்லை ஆனால் தனியார் விழாக்களுக்கு போய் காத்திதிருக்கிறார்கள். முறைகேடுகளுக்கு முன்னுரை எழுத முயல்கிகிறார்கள்... ஒரு சவாலுக்கு
      அரசுப் பள்ளிகளில் மட்டும் பொதுத் தேர்வு எழுத சென்டர் போட முடியுமா?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி