ரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2018

ரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்

ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.ரூ.49 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
முன்னதாக ஏர்டெல் ரூ.49 விலையில் அறிவித்த சலுகையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்பட்டது.ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.49 சலுகைக்கு போட்டியாக ஏர்டெல் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜியோ சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

ஏர்டெல் புதிய ரூ.49 சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் செயலி அல்லது ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் செல்ல வேண்டும். இந்த சலுகையை டேட்டா பிரவில் காண முடியும். இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதை உறுதிசெய்த பின் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ்செய்யலாம். புதிய சலுகை வழங்கப்படாத வாடிக்கையாளர்களுக்கு ரூ.49-க்கு 1ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.ஜியோ வழங்கும் ரூ.49 சலுகை ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் ரூ.65 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 2ஜி / 3ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இத்துடன் 4ஜி ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் 30 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது. இந்த சலுகை 2ஜி / 3ஜி மொபைல் பயன்படுத்துவோர் 4ஜி ஸ்மார்ட்போனிற்கு மாறும் போது இலவச டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் அறிவித்த ரூ.249 சலுகையை அறிவித்து ரூ.349 சலுகையில் கூடுதல் சேவைகளை வழங்குவதாக அறிவித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி