500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2018

500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசுடன் இணைந்து முதல் கட்டமாக 500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கவுள்ள 500ஆசிரியர்களுக்கு,அமெரிக்க பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த உடன் மாற்றம் செய்யப்பட்ட புதிய சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப் படும்.நலிந்த பிரிவினருக்கு தொடக்கநிலை வகுப்புகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டைகடைபிடிக்காத தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாட்களிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி