குழந்தைகள் தின தேதியை மாற்ற 60 எம்.பி.,க்கள் கடிதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2018

குழந்தைகள் தின தேதியை மாற்ற 60 எம்.பி.,க்கள் கடிதம்!

ஆண்டுதோறும் நவ., 14ம் தேதி முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் என்று குழந்தைகள்தினத்தை கொண்டாடுவதை விட்டு, டிச., 26ம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும் என, பிரதமர் மோடிக்கு, 60 எம்.பி.,கள் கடிதம் எழுதியுள்ளனர்

மாமா தினம் கொண்டாடலாம்

மேற்கு டில்லி லோக்சபா தொகுதியின் பா.ஜ., - எம்.பி., பர்வேஷ் சாகிப் சிங் வர்மா என்பவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், 59 பா.ஜ., எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில் கூறியிருப்பதாவது**முன்னாள் பிரதமர் நேருவை, ' சாச்சா நேரு' அதாவது, 'மாமா நேரு' என்று தான் அன்புடன் குழந்தைகள் அழைத்து வந்தனர்*

எனவே, அவரது பிறந்த நாளை, ' மாமா தினமாக தான் கொண்டாடவேண்டும். அதற்கு பதில் சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்கள் வீர மரணம் அடைந்த டிச., 26ம் தேதியை தான் குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும்.

முகலாய மன்னர் ஓளரங்கசீப் ஆட்சியின் போது டிச., 26ம் தேதி குரு கோவிந்த் சிங்கின் மகன்கள், அஜித் சிங் (18), ஜூகார் சிங்(14), ஜோராவார் சிங்(9), பதேக்சிங்(7) ஆகியோர் கொல்லப்பட்டனர். அன்றைய தினத்தை தான் குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

9 comments:

  1. மோடி பிறந்த தினத்தை வேண்டுமானால் கொண்டாடலாமா?

    குழந்தைகள் மட்டுமல்ல
    இந்தியர் அனைவரும்
    சந்தோசப் படுவர்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உலகின் நடமாடும் பிரதமர்

    ReplyDelete
  4. கூஜா லிங்கத்தின் பிறந்த நாளை (9/9/1999) ஐ உலக நகைச்சுவை தினமாக கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்துள்ளது.....

    ReplyDelete
  5. MPs ellam evlo national importance niranja oru visayathukku letter eluthiirukkanga. Itha thavira namma nattula iruntha ella prachanaigalum theerthu vechutanuga. Ini intha visayatha niraivethitanugana namma nadu valarntha nada maridum. Idiots

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி