வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2018

வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவு.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில், வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.லடாக்கின்லே மற்றும் கார்கில் மாவட்டங்கள், காஷ்மீரின் தென் பகுதியில் உள்ள ஷோபியான் மற்றும் ஸ்ரீநகர் ஆகியவை திறந்தவெளி கழிப்பறை இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், அனந்தநாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில், கழிப்பறை கட்டும் பணி, 100 சதவீதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிஷ்த்வார் மாவட்டத்தில், கழிப்பறை கட்டும் பணி, 57 சதவீதத்தை எட்டியுள்ளது.

இங்கு பணிபுரியும் அரசுஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டது; அப்போது, 616 ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்படாதது தெரியவந்தது. இதையடுத்து, கழிப்பறை கட்டும் வரை, அந்த ஊழியர்களின் மாத சம்பளத்தை நிறுத்தும்படி, மாவட்ட அபிவிருத்தி ஆணையர், அங்கிரேஸ் சிங் ராணா உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி