6,029 அரசு பள்ளிகளில் தொழில்நுட்ப ஆய்வகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2018

6,029 அரசு பள்ளிகளில் தொழில்நுட்ப ஆய்வகம்

''தமிழகத்தில், 6,029 அரசுப்பள்ளிகளில், தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க, 462 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி தெரிவித்தார்.
கோவை, கிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், 'நீட்' தேர்வுஎழுதும் மாணவர்களுக்காக, உண்டு, உறைவிட பயிற்சி வகுப்புகள் துவக்க விழா, நேற்று நடந்தது. மாணவர்களுக்கு சிறப்பு கையேடு மற்றும், 'லேப் - டாப்' வழங்கிய, அமைச்சர் வேலுமணி பேசியதாவது:மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, விலக்கு பெறும் முயற்சிகள் நடக்கின்றன. இருப்பினும் தமிழக மாணவர்கள், போட்டித்தேர்வு களை எதிர்கொள்ளும் வகையில், ஒன்றிய வாரியாக, 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 70 ஆயிரத்து 419 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மண்டல உண்டு உறைவிட பயிற்சியில், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட, ஆறு மாவட்டங்களில், தமிழ் வழியில்படிக்கும், 350 மாணவர்களுக்கு, மே, 4 வரை வகுப்புகள் நடக்கின்றன.

இதுதவிர, 3,000 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், 60 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும், 2018 - 19 கல்வியாண்டில், 3,090 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 2,939 மேல்நிலைப்பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்,462 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு அமைச்சர் வேலுமணி பேசினார்.

4 comments:

  1. lab assistant absent list eppo fill pannuvinga

    ReplyDelete
  2. LAB ASST LIST PODUNGA SIR,, APROM LAB KATTUNGA SIR

    ReplyDelete
  3. *_✅💢 RTI - தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed - உடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு._*
    >
    🔆https://kaninikkalvi.blogspot.in/2018/04/rti-ug-with-bed-pg-with-bed-caste.html?m=1

    *_✅💢பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை_*
    >
    🔆 https://kaninikkalvi.blogspot.in/2018/04/blog-post.html?m=1

    🌎More News Visit - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  4. trb இயக்குனர் நந்தகுமார் மாற்றம்.... என்ன தான் நடக்கிறது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி